• October 22, 2026

கயத்தாறு மைதானத்தில்  மாவட்ட ஆக்கி லீக் போட்டி நடத்த முடிவு

 கயத்தாறு மைதானத்தில்  மாவட்ட ஆக்கி லீக் போட்டி நடத்த முடிவு

ஆக்கி  யூனிட் ஆப் தூத்துக்குடி பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது பொதுக்குழு கூட்டத்திற்கு ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம் தலைமை தாங்கினார். கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பொன்ராஜ் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி ஆகியோர்  முன்னிலை  வகித்தனர் சட்ட ஆலோசகர் பெரியதுரை அனைவரையும் வரவேற்றார்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

 *தூத்துக்குடி மாவட்ட ஆக்கி லீக் போட்டி புதிதாக அமைக்கப்பட்ட கயத்தாறு ஆக்கி மைதானத்தில்  நடத்தபடும்,

*ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி  சங்கத்திற்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மாவட்ட ஹாக்கி கழக  லோகோ (சின்னம்) பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

*தலைவர் மற்றும் செயலாளர் அனுமதியின்றி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்துவது செல்லாது

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
*பொதுக்குழு கூட்டத்தில் தூத்துக்குடி டவுன் ஆக்கி கிளப் செயலாளர் ஜார்ஜ் ஈஸ்டர் , பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பொன்ராஜ், கோவில்பட்டி ஆக்கி கிளப் செயலாளர் காளிமுத்து பாண்டி ராஜா, பாண்டியராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் ராம்குமார், இலுப்பை யூரணி 11 ஆக்கி கிளப் செயலாளர் ராஜ மனோகர், தாமஸ் நகர் ஆக்கி கிளப் செயலாளர் ராஜன், சுந்தரலிங்கம் ஆக்கி கிளப் செயலாளர் தங்கராஜ், அசோக் நினைவு ஆக்கி கிளப் செயலாளர் பெரியதுரை, திட்டங்குளம் ஆக்கி கிளப் செயலாளர் மனோஜ் ,தந்தை ஞானமுத்து ஆக்கி கிளப் செயலாளர் சுரேஷ்குமார், நாகலாபுரம் ஆக்கி கிளப் செயலாளர் ஆல்ரின் அதிசயராஜ், மகா சக்தி ஆக்கி கிளப் செயலாளர் செல்வகுமார், யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் மாரியப்பன் கோவில்பட்டி யுனைடெட் ஆக்கி கிளப் செயலாளர் அஸ்வின், மகேஷ் நினைவு ஆக்கி கிளப் செயலாளர் காளிதாஸ், அசோகா ஆக்கி கிளப் செயலாளர் வேலுச்சாமி, செல்லையா ஆக்கி கிளப் செயலாளர் வேல்முருகன்,எஸ்.எம்..பி. ஆக்கி  கிளப் செயலாளர் முகேஷ் குமார் , பெண்கள் செயற்குழு உறுப்பினர்கள் மகாலட்சுமி, ஹெலன் மேரி ,  மேரி வினோ லோபோ சமுத்திரக்கனி, ஜாக்களின் சுபா, நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அய்யாதுரை மற்றும் மூத்த வீரர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *