தூத்துக்குடி புத்தக திருவிழாவின் கடைசி நாளில் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்
![தூத்துக்குடி புத்தக திருவிழாவின் கடைசி நாளில் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்](https://tn96news.com/wp-content/uploads/2024/10/0771e7a1-9bf5-4c31-b429-13bb39162343-850x560.jpg)
தூத்துக்குடி சங்கரபேரி திடலில் 5வது புத்தகத் திருவிழா அக்டோபர் 3ஆம் தேதி துவங்கியது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கடைசி நாளான நேற்று புத்தகக் கண்காட்சியை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி மகிழந்தார்.
தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழாவில், புகைப்படங்கள் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைக் கனிமொழி கருணநிதி எம்.பி கண்டு மகிழ்ந்தார். தூத்துக்குடியின் கலாசாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கைக் காட்சிகள் (கடற்பரப்புக்கள் நதிக்காட்சிகள். சதுப்பு நிலங்கள், நகர்ப்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் சதுப்பு நில பறவைகள், தொழிலாளர்கள் (தொழில்துறை. மீன்பிடித்தல்), விளையாட்டு போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்புகைப்படப் போட்டியானது இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும், போட்டியில் கலந்துகொள்ள 18 வயது வரையிலான நபர்கள் ஒரு பிரிவாகவும்,18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு பிரிவாகவும் என இரண்டு பிரிவுகளின் கீழ் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறந்ததாகத் தெரிவு செய்யப்படும் புகைப்படம் புத்தகக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும், பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்படும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)