சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பொன்ராம். சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பொன்ராம்.,மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார்,காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சண்முக பாண்டியன் கடைசியாக மதுர வீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக படை தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் பொன்ராம் அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
