புதிய உச்சத்தை தொட்ட ரஜினி படத்தின் பாடல்: தொடர்ந்து யூடியூபில் டிரெண்டிங்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கினார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல் யூடியூபில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது இப்பாடல் இது வரை 250 மில்லியன் (25 கோடி) பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடல் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. படக்குழு இது குறித்த பதிவை தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
