குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திமுக சார்பில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் விளக்கு பூஜை நடைபெற்றது. 5,008 பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது மனைவி சாமி தரிசனம் செய்தனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் குத்துவிளக்கு, பட்டு சேலை மற்றும் பூஜை பொருட்கள் […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடராம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள புதியம்புத்தூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், […]
தூத்துக்குடி தாள முத்துநகர் தாய் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 24). இவர் தனது நண்பர்களான ரிஜோ (21), ஹவுசிங் போர்டு விக்னேசுவரன் (20) மற்றும் 2 பேருடன் சேர்ந்து கதிர்வேல்நகர் குப்பைகிடங்கு அருகில் மது குடித்தனர். அப்போது அங்கு வந்த விக்ரம் (22), ராபர்ட் ஆகிய 2 பேருக்கும் முத்துராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விக்ரம், ராபர்ட் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து முத்துராஜை […]
நாடாளுமன்ற தேர்தலையொட்டி முக்கிய கட்சிகள், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதேபோல் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அலுவலகங்களை திறந்து வருகின்றனர். அதன்படி கோவில்பட்டியில் பா.ஜனதா தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. மாதாங்கோவில் ரோடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் எதிரில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவில் பாராளுமன்ற தேர்தல் இணை பொறுப்பாளர் விவேகம்டிராவல்ஸ் ரமேஷ் பங்கேற்று திறந்து வைத்தார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை […]
மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிக அளவிலான மக்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்ட்டர் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. மேலும் இந்த கவுண்ட்டரில் இருக்கும் ஊழியருக்கு தமிழ் தெரியாது. வடமாநிலத்தை சேர்ந்தகர்கள் […]
தூத்துக்குடி பெரியார் நகரில், தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் உப்பள தொழிலாளர்களுக்கான சுகாதார வளாகத்தை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
ஆண்டுதோறும் தை மாதம் உத்தராயன புண்ய காலத்தில் வளர்பிறை சப்தமி திதியில் சூர்ய பகவான் ரதம் வடக்கு நோக்கி திரும்பும் இந்நாளில் அனைத்து சிவ, வைணவ கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது ஐதீகம். இதனையொட்டி கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி,ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு வெற்றி விநாயகர், […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2.43 கோடி மதிப்புள்ள ஸ்கேன் இயந்திரத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடக்கி வைத்து, பயன்பாட்டிற்கு வழங்கினார். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடியில் 64 மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் ஆணைகளை கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா வழங்கினார்
தூத்துக்குடி காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தியது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரா.ஐஸ்வர்யா, 64 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை இன்று வழங்கினார். கல்விக் கடன் முகாமில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி […]
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராய குறிச்சியில் அ.தி.மு.க., பிரமுகர் பிச்சையா என்பவர் கடந்த 10.3.2015 ல் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அந்தப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. வீடுகள், கார்கள், சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பு வழங்கினார். அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ், […]







