நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையுடன் வெளியான திரைப்படம் ‘ஜப்பான்’. இயக்குனர் ராஜு முருகன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது.‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு போட்டியாக ஒரே நாளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.28 கோடிக்கு மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்ததாக […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் விழா நடைப்பெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது . பின் 8 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் கும்ப பூஜை சங்குக்கு பூஜை கணபதி ஹோமம் அம்பாள் மூலமந்திர ஹோமம் பூர்னாஹுதி நடைப்பெற்றது. அதன்பின் அம்பாளுக்கும் உற்சவர் […]
உடல்நலகுறைவு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன, அவர் உடல்நிலை தேறிவருகிறார் என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.’இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ,” சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த […]
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று கோவில்பட்டி வந்தார். திருநெல்வேலியில் இருந்து வந்த அவருக்கு இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கபப்ட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் எஸ்.ஆர். பாஸ்கரன் தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, நகர செயலாளர் பழனி முருகன், நகர இலக்கிய அணி செயலாளர் ரஸ்னா மாரியப்பன், மாவட்ட […]
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான விளக்க கூட்டம் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத்தலைவரும், கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி போஸ்ட் மாஸ்டருமான கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். தலைக்காட்டுபுரம் அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். 12க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேலைநிறுத்தம் பற்றி விளக்கமாக பேசினார்கள். பொருளாளர் பட்டுராஜன் நன்றி கூறினார்கள் கூட்ட ஏற்பாடுகளை செயலார் உ.பிச்சையா […]
சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்ற தமிழக முதலமைச்சரின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மிக்ஜாம் புயல் குறித்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காத காரணத்தினால்தான் மக்கள் இந்த அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் சாக்கடை நீர் கலந்து, இன்று […]
பெங்களூருவில் கட்டுமான உபகரணங்கள் கண்காட்சி; கோவில்பட்டி `SAZS’ APPS நிறுவனம் பங்கேற்கிறது
கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் தெற்கு ஆசிய அளவிலான மிகப்பெரிய கட்டுமான உபகரணங்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சிக்கு Excon (எக்ஸ்கான்) என்று பெயரிடப்பட்டுள்ளது. நாளைய இந்தியாவை உருவாக்குவோம் என்ற குறிக்கோளுடன் நடக்கும் இந்த கண்காட்சியில் 15 நாடுகளை சேர்ந்த 80 ஆயிரம் வணிக பார்வையாளர்கள் பங்கேற்கிறார்கள். 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடக்கும் இந்த பிரமாண்ட கண்காட்சி திடலில் 6 நாடுகளில் இருந்து […]
புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம்; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. மழை விட்டு 5 நாட்கள் ஆகியும், இன்னும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பாடில்லை. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.இந்த நிலையில் , […]
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமாருக்கு, விமான நிலையத்தில் அக்கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:- சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்தும் சென்னை போன்ற மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்னமும் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்யமுடியாமல் […]
கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் `முன்கூட்டியே வருமான வரி செலுத்துதல்’ பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி பட்டய கணக்காளர்கள் மற்றும் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வருமான வரித்துறை உதவி ஆணையர் காசி சங்கர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், “வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் அந்தந்த வருடத்திற்கு செலுத்தக்கூடிய வருமான வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டிய அவசியம் குறித்தும், self tax கட்டுவதாலும், தாமதமாக கட்டுவதாலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்” […]







