தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் ஜமீன் தேவர்குளம் கிராமத்தில் இன்று (9.8.23) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் .கி.செந்தில்ராஜ் கலந்து கொண்டார். அவர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த அரங்குகளை கலெக்டர் .கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார். மேலும் அரங்குகளை பார்வையிட வந்திருந்த மக்களிடம் அதிகாரிகள் அரசின் திட்டங்கள் பற்றி […]
இந்திய சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன, முக்கியமாக துறைமுகம், ரெயில் நிலையங்கள், அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இன்று காலை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை டிவிசன் வெடிகுண்டு பிரிவு உதவி ஆயவாளர் ஜெயக்குமார் மற்றும் கோவில்பட்டி ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சந்திரன், எட்டு சங்கரலிங்கம் […]
குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம்; போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பொதுமக்கள் உறுதிமொழி
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலப்பேரி இந்து நாடார் திருமண மஹாலில் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசியதாவது:- கிராமங்களில் எந்தவித சண்டை சச்சரவு இல்லாமல் மக்கள் அமைதியான முறையில் இருப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் […]
தமிழக காவல்துறையில் 3,359 காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு; 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 3,359 பதவிகளுக்கு பொதுத் தேர்வுக்கு, வரும் 18ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. காலி பணியிடங்கள் விவரம் : காவல்துறை இரண்டாம் நிலை (ஆயுதப்படை (பெண்கள்) / சிறப்பு காவல் படை) – 2,599. சிறை மற்றும் சீர்திருத்தத்துறை – 86, தீயணைப்பாளர் – 674 என மொத்தம் 3,359 காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு […]
தெய்வத்திற்கு படைக்கப்படும் முக்கிய அபிஷேக பொருள் தேங்காய்…….!! ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு. கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால், கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது….. ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும், இரண்டு கண் தேங்காய் லக்சுமியாகவும், மூன்று கண் தேங்காய் சிவனாகவும் &
ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள். இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் அனுமார். அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின் அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தை பார்த்தபோது அங்கு குங்குமத்திற்கு பதில் செந்தூரம் இருந்ததை கண்டார். அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது”என அனுமான் கேட்க, அதற்கு சீதாபிராட்டி, […]
நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு குடிமகனும் தங்களுடைய வீட்டில் வரையறுக்கப்பட்ட விதிகளின் படி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசியக்கொடி ஏற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி இந்திய அஞ்சல் துறையின் சார்பில் நாடு முழுவதிலும் உள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு தேசிய கொடியின் விலை ரூ.25 ஆகும். கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுமக்களின் வசதிக்காக தேசிய கொடியின் […]
மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. ‘ எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது, சுத்தம் செய்வதும் சுலபம்’ என்பதால், நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான் இன்று பெரும்பாலானவர்களின் சமையலறையை ஆக்கிரமிக்கின்றன.”மண்சட்டி, இரும்பு, வெண்கலப் பாத்திரங்களில் சமைத்த உணவால் உடலுக்குப் பலன் உண்டா? நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன?”அந்த காலத்தில், வசதியற்றவர்கள் மண்சட்டியில் சாதம் செய்வார்கள். மணமாய் இருக்கும். ஓரளவுக்கு […]
கோவில்பட்டியில் பா. ஜனதா மாவட்ட ஊடகப்பிரிவு அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில், தேசிய சிறுபான்மையினர் அணி பொதுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் முன்னிலையில் அ. தி. மு. க. வை சேர்ந்த கடம்பூர் சூடாமணி, மாற்றுக் கட்சியை சேர்ந்த காளீஸ்வரி, புதிய உறுப்பினர் ஸ்ரீராம் ஆகியோர் பா.ஜ க.வில் இணைந்தனர். பா. ஜனதா மாவட்ட துணை தலைவர் ஆர் பி பாலு, மூத்த காரிய கருத்தா பொன்னுச்சாமி, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் வினோத் […]
கோயிலுக்கு செல்லும் போது… 1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 2.வெறும் கையுடன் கோயிலுக்கு போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும். 3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்ல கூடாது. 4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலைமுடியை விரித்து போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது. 5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட வேண்டும். 6. பெண்கள் தங்கள் […]







