• November 1, 2024

அர்ச்சனை தேங்காய் அழுகி இருந்தால்….??

 அர்ச்சனை தேங்காய் அழுகி இருந்தால்….??

தெய்வத்திற்கு படைக்கப்படும் முக்கிய அபிஷேக பொருள் தேங்காய்…….!!

ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு. கண் நரம்பு இல்லாத தேங்காய்  கிடைக்காததால், கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது…..

ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும், இரண்டு கண் தேங்காய் லக்சுமியாகவும், மூன்று கண் தேங்காய் சிவனாகவும்                                                         போற்றப்படுகிறது.

இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தை காண்பிக்க, தேங்காயில் சில சகுனங்கள் உண்டு.

தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால், தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம் மனதில் தொற்றி கொள்ளும்

ஒரு சிலா் நடக்கக்கூடாதது ,நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவா்களையும் பயமுறுத்துவாா்கள்

தெய்வத்திற்கு உடைக்கும் தேங்காய் அழுகி  இருந்தால், நாம்வேண்டிய காரியம் சித்திஆவதன்_அறிகுறியே..!!

ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் ,அழுக்குநீர்தான்_வரும்.”….அதே போல தான்…உங்கள் பீடை, சரீர பீடை,  கெட்டசொப்பனங்கள், கண்திருஷ்டி,ரோக நோய் ஆகியவை அனைத்தும் பிராா்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் , விலகியதின்_அறிகுறியைதான் காட்டுகிறது.

தெய்வத்திற்கு உடைக்கும் தேங்காய், முழுக்கொப்பரையாக_இருந்தால். சுபகாரியம் உண்டாகும், புத்திர  பாக்யம் உண்டாகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

உடைக்கும்_தேங்காயில் பூ_இருந்தால் ரோக நோய் விலகும். எதிர்பாராத தனவரவு, சொர்ண லாபம் உண்டாகும்.

நீங்கள் உங்களையோ அல்லது  இறைவனையோ முழுமையாக நம்பினால் போதும் …நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும். இறையருளால்_சுபமாகவே நடக்கும்.

ஓம்நமசிவாயநமஹ…!!

காசி விஸ்வநாதன்-திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *