பா. ஜனதாவில் மாற்று கட்சியினர் இணைந்தனர்

கோவில்பட்டியில் பா. ஜனதா மாவட்ட ஊடகப்பிரிவு அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில், தேசிய சிறுபான்மையினர் அணி பொதுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் முன்னிலையில் அ. தி. மு. க. வை சேர்ந்த கடம்பூர் சூடாமணி, மாற்றுக் கட்சியை சேர்ந்த காளீஸ்வரி, புதிய உறுப்பினர் ஸ்ரீராம் ஆகியோர் பா.ஜ க.வில் இணைந்தனர்.
பா. ஜனதா மாவட்ட துணை தலைவர் ஆர் பி பாலு, மூத்த காரிய கருத்தா பொன்னுச்சாமி, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் வினோத் குமார், ஊடகப்பிரிவு, மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன், மகளிர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தில்லை ஆகியோர் உடன் இருந்தனர்.
