கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதாவது 8 துணை மின் நிலையயங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை 18-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின்சப்ளை இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் கோவில்பட்டி செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து அறிவித்து இருந்தார். இது பற்றிய செய்தி இன்று காலை www.tn96news.com இணையதளத்தில் காலை 11.28 மணிக்கு வெளியானது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளைய (18 ந்தேதி) மின்சப்ளை […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து […]
தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ மற்றும் கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. நான் முதல்வன் திட்டத்தில் ‘உயர்வுக்கு படி’ உடனடி சேர்க்கை பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு ஆணைகளையும், கல்வி பயில புத்தகங்களையும், 15 பேருக்கு கல்வி கடனும் வழங்கப்படுகிறது. மேலும் பணியில் இருந்தபோது மரணம் அடைந்த சத்துணவு பணியாளர்களின் வாரிசுகள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி […]
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரை இந்து ஆலயம் பாதுகாப்பு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.பிரமசிவம் மற்றும் நிர்வாகிகள் இன்று சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அரசியல் கட்சியினர் அல்லது ஜாதிய அமைப்பு இந்து அல்லாத மாற்று மதத்தினர் எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். கடந்த 14.8.21 அன்று […]
நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கு நேற்று சென்ற விரைவு ரெயிலின் பின்பக்க பொது பெட்டியில் கூடடம் அதிகம் இருந்தது.திருநெல்வேலி யில் இருந்து ஈரோடு சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மருதமுத்தூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 32), மற்றும் கோவில்பட்டி வ. உ. சி. நகர் மாறியப்பன் (48) ஆகியோர் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தனர்.அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கைகலப்பாக மாறியது. நள்ளிரவு மேல் 1 மணி அளவில் சாத்தூர் -துலுக்கப்பட்டி இடையே […]
அதிமுக பொன்விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில், வீர வரலாற்றின் பொன்விழா எனும் பெயரில் எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செய்வதற்கு ஏதுவாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக குழுக்களின் உறுப்பினர்களுடன் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மாநாட்டின் மேடை மற்றும் முகப்புக்காக, டெல்லி செங்கோட்டை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, நாடாளுமன்றம், போன்ற வடிவங்களில் […]
தமிழ்நாடு காமராஜர் பேரவையின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு இன்று கோவில்பட்டி காமராஜர் அரங்கத்தில் வைத்து பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. லிழாவிற்கு தமிழ்நாடு காமராஜர் பேரவையின் தலைவர் நாஞ்சில் குமார் தலைமை தாங்கினார். கொள்கை பரப்புச்செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார், அமைப்புச் செயலாளர் அமிர்தராஜ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தலைவர் முத்துக்குமார், காமராஜர் உருவபடத்தை திறந்து வைத்தார். […]
பாண்டிச்சேரியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் பாண்டிச்சேரி, தமிழகத்தில் பொருட்காட்சி நடத்தி வருகிறார். இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொருட்காட்சி நடத்துவதற்கு திட்டமிட்டு மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் சர்க்கஸ் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதில் ராட்டினங்கள், ரோபோடிக் பறவைகள், ஜம்பிங் பலூன், பப்லோ ரைட் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை அமைத்திருந்தார். மேலும் ஜூலை 15-ம் தேதி (நேற்று )முதல் 30-ம் தேதி வரை 16 நாட்கள் பொருட்காட்சி நடைபெறும் என கோவில்பட்டி நகர் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை சனிப் பிரதோஷம் சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் எஸ். எஸ், துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சாம்பியன் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. ,மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து காலையில் மாரத்தான் போட்டி தொடங்கியது. பல்வேறு கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்து இருந்தனர். நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனி செல்வம் கொடி அசைத்து போட்டியை தொடக்கி வைத்தார். அங்கிருந்த புறப்பட்ட மாணவர்கள் மாரத்தான் ஓட்டம் மூலம் கல்லூரியை அடைந்தனர், இதில் […]







