கோவில்பட்டியில் சாம்பியன் மாரத்தான் போட்டி; பொள்ளாச்சி மாணவருக்கு முதல் பரிசு
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் எஸ். எஸ், துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சாம்பியன் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
,மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து காலையில் மாரத்தான் போட்டி தொடங்கியது. பல்வேறு கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்து இருந்தனர். நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனி செல்வம் கொடி அசைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.
அங்கிருந்த புறப்பட்ட மாணவர்கள் மாரத்தான் ஓட்டம் மூலம் கல்லூரியை அடைந்தனர், இதில் முதல் பரிசு பொள்ளாச்சி எஸ்.டி.சி.கல்லூரி மாணவர் எஸ்.கனிராஜாவுக்கு கிடைத்தது. இரண்டாம் பரிசு பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் மாணவர் ஆனந்தராஜ், மூன்றாம் பரிசு சிவகாசி ஏ.ஜே.கல்லூரி மாணவர் பி.மாரிமுத்து ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம்,2 ஆயிரம், 1௦௦௦ ரொக்க பரிசு வழங்கப்பட்டது,


அடுத்து வந்த 7 மாணவர்களுக்கு தலா ரூ.500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி செயலர் கண்ணன் தலைமை தாங்கி பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ஆர்.செல்வராஜ் , கிழக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் டாக்டர் ஆர்.சந்திரசேகர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்,உதவி பேராசிரியர்கள் செய்து இருந்தனர்,







