காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்
கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு சொந்தமான காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ.மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் 121-வது பிறந்தநாலை முன்னிட்டு அரசு உத்தரவுப்படி இன்று பள்ளி நடைபெற்றது.
,முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முயன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் டி.ஆர். சுரேஷ் குமார் , விழாவை தொடங்கி வைத்தார். பள்ளியின் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். பார்வையாளர்கள் அவற்றை கண்டு ரசித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது,.







