கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் 121வது காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக இன்று ( சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே . பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படி கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க உப தலைவர். செல்வராஜ், பொருளாளர் சுரேஷ் குமார், உறுப்பினர் .ராஜேந்திரபிரசாத் தர்மகர்த்தா. மாரியப்பன், நாடார் நடு நிலைப்பள்ளி உறுப்பினர் மணிக்கொடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

பள்ளி பொருளாளர் ரத்தினராஜா , பள்ளி உறுப்பினர்கள். தாழையப்பன், . தங்கமணி,. பால்ராஜ் மனோகரன்,. செல்வம் ஆகியோர் வருகை தந்து விழாவினை சிறப்பித்தனர். பள்ளி முதல்வர்.பிரபு அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்தும் மாணவியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களோடு பேரணியாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 2022-2023 ம் கல்வியாண்டில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மாணவி பிருந்தாலட்சுமி நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் செய்திருந்தனர். விழா முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.







