121-வது பிறந்தநாள்: கோவில்பட்டியில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கர்மவீரர் காமராஜர் 121 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கோவில்பட்டியில் அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செய்யபப்ட்டது.
காலையில் இருந்து மதியம் வரை அரசியல்கட்சியினர் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அரசு சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி தலைவர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து திமுக வினர் மாலை அணிவித்தனர். ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் அதிமுகவை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. பசுமை தாயகம் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்,





கோவில்பட்டியில் காமராஜர் சிலைக்கு ம.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் மாலை அணிவித்தார்., நகர செயலாளர் எஸ். பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சி.சரவணன், கேசவநாரயணன்,கடலையூர் மாரிச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் செ.வனராஜன், பொதுக் குழு உறுப்பினர் கொம்பையா,செ.முத்துப்பாண்டியன்,தீர்மானக்குழு உறுப்பினர் P.முத்துச்செல்வன், மற்றும் லியோ செண்பகராஜ், A.நாகராஜ்,நகர் இளைஞர் அணி செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர துணை செயலாளர் குழந்தை வேலு, டான் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு தே.மு.தி.க.வினர் மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மாவட்டஅவைதலைவர் கொம்பையா பாண்டியன் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஆர்.சாமி, நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன், ஒன்றியசெயலாளர் மேற்கு பெருமாள்சாமி, கிழக்கு பொன்ராஜ், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் மேகலிங்கம், மாவட்ட தொண்டரணி லட்சுமணன், முத்துக்குமார், நகரநிர்வாகிகள் பாலு, ராஜா, மதிமுத்து உட்பட தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்புத் தலைவர் க.தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், இந்தியக் கலாச்சார நடபுறவுக்கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தலைவர் கருப்பசாமி, தமிழ்நாடு காமராஜர் பேரவையின தலைவர் நாஞ்சில் குமார், தொகுதிப் பொறுப்பாளர் அசோகன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் தலைவர் காளிதாஸ், நிர்வாகிகள் குருஜீ, லட்சுமணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் லட்சுமணன், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் நிர்வாகி கலைச்செல்வன், பிரபாகரன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அருள்தாஸ், உள்ளிட்ட பலர் காமாராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த்தினர..
விஜய் மக்கள் இயக்கம்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோவில்பட்டி பெரு நகர தலைவர் சுரேஷ் தலைமையில் செயலாளர் செண்பகராஜ் முன்னிலையில்., காமரஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவி செல்வி நகர இளைஞர் அணி மகேஷ் குமார் & காளிராஜ்… நகர பேரவை சண்முகக்கனி,. மாணவர் அணி விக்னேஷ் &பிரம்மா, ஒன்றிய தலைமை தினேஷ் , அஜித்… நகர பாசறை முனீஸ்வரன் , கார்த்திக்…
நகர கலை இலக்கிய அணி லாரன்ஸ், எட்டையபுரம் பாலசுப்ரமணியன், வீரவாஞ்சி நகர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஐ.என்.ஆர்;எல்.எப்..சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, சம்மேளன அலுவலத்தில் மணியளவில் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலலவர் சோ பெரியசாமி அவரது படத்திற்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கினார்.

கல்வி வளர்ச்சி நிதி உதவி 12 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி நடராஜபுரம் சி சிவப்பிரியா, மாணவர் தெற்கு திட்டங்குளம் ம. சஞ்சய் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ 3,000 சம்மேளன தலைவர்கள் தவாழப்பாடி இராம சுகந்தன், இராம கரணன் ஆகியோரின் ஆலோசனையின்படி வழங்கப்பட்டது. முடிவில் சம்மேளன செயலர் பாலகுமார் நன்றி கூறினார்
கோவில்பட்டி வீரபாண்டி நகர் யு. பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப் பட்டது. விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி நிறுவனர் எம். பரமசிவம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அமுதவல்லி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி பொதுநல மருத்துவமனை தலைவர் டி. திலகரத்தினம், கம்பன் கழக செயலாளர் டி. சரவணச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினார்கள். அசோக்குமார் நன்றி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் அருண்பாண்டியன் ஏற்பாட்டில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கதொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குமாவட்ட துணை தலைவர் பொன்னுசாமி பாண்டியன் தலைமையில் மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் மாறன், மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர முன்னாள் தலைவர் சண்முகராஜா கொடியேற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிச்சைக்கனி வரவேற்று பேசினார் மாநில பொதுகுழு உறுப்பினர் திருப்பதிராஜா, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மாரிமுத்து, ஜோஷ்வா, ஐ.என்.டி.யு.சி. ராஜசேகர், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் காளிதாஸ், வர்த்தக அணி மாவட்டதலைவர் ராஜா,தகவல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா சேகரன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் அருள் தாஸ், மாணவர் அணி தலைவர் பிரபு, தாஸ், நேதாஜி காளிதாஸ், ஆறுமுகம், வட்டார தலைவர் செல்லதுரை சண்முகக்கனி, ஆறுமுகசாமி,முத்துராமலிங்கம், மைக்கிள், ஜான்சன்,பாலமுருகன் ஆறுமுகசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு காலை முதல் மதியம் வரை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்ப்பு போடப்பட்டு இருந்தது,







