மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகள் பரிசளிப்பு விழா
![மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகள் பரிசளிப்பு விழா](https://tn96news.com/wp-content/uploads/2023/07/IMG-20230716-WA0180-850x560.jpg)
தமிழ்நாடு காமராஜர் பேரவையின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு இன்று கோவில்பட்டி காமராஜர் அரங்கத்தில் வைத்து பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
லிழாவிற்கு தமிழ்நாடு காமராஜர் பேரவையின் தலைவர் நாஞ்சில் குமார் தலைமை தாங்கினார். கொள்கை பரப்புச்செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார், அமைப்புச் செயலாளர் அமிர்தராஜ் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தலைவர் முத்துக்குமார், காமராஜர் உருவபடத்தை திறந்து வைத்தார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/07/IMG-20230716-WA0181-1024x536.jpg)
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன், உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் கருத்தப்பாண்டி, வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ், ஜெய்கிரிஷ் அறக்கட்டளையின் தலைவர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பெஞ்சமின் பிராங்களின், நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி தொகுதிச்செயலாளர் ரவிக்குமார், மைக்ரோபாய்ண்ட் முதல்வர் ஆர்ம்ஸ்ட்ராங், களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மேரி ஷீலா, அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றமறக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தலைவர் கருப்பசாமி, ரோட்டரி துணை ஆளுநர் முத்துச்செல்வம், பாண்டியனார் பேரவையின் சீனிநாடார், நாடார் காமராஜர் பள்ளியின் பொருளாளர் ரத்தினராஜா, மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் கமல் ரமேஷ், காமராஜர் பேரவையின் மாநில இணைச்செயலாளர் பெரியநாயகம், உலகத் தமிழாய்வுப் பேரவையின் நிலாமகன், பகத்சிங் ரத்ததானக் கழகத்தின் காளிதாஸ், காமராஜர் பேரவையின் கோவில்பட்டி தொகுதிப் பொறுப்பாளர் அசோகன், உட்பட பலர் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/07/IMG-20230716-WA0179-1024x512.jpg)
நிகழ்ச்சியை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் சம்பத்குமார் தொகுத்து வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)