கோவில்பட்டியில் நாளை மின்சப்ளை இருக்கும்; செயற்பொறியாளர் அறிவிப்பு
![கோவில்பட்டியில் நாளை மின்சப்ளை இருக்கும்; செயற்பொறியாளர் அறிவிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2023/07/th-3-2.jpeg)
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதாவது 8 துணை மின் நிலையயங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை 18-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின்சப்ளை இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் கோவில்பட்டி செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து அறிவித்து இருந்தார்.
இது பற்றிய செய்தி இன்று காலை www.tn96news.com இணையதளத்தில் காலை 11.28 மணிக்கு வெளியானது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளைய (18 ந்தேதி) மின்சப்ளை வழக்கம் போல் இருக்கும் என்றும் மின் தடை செய்யப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் செயற்பொறியாளர் காளிமுத்து தற்போது அறிவித்து உள்ளார்.
எனவே நாளை மின்சப்ளை தடை இல்லை. வழக்கம் போல் இருக்கும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)