கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் சங்கரக்குமார் பள்ளியில் இலவச பொது மருத்துவம் ,கண் பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது நாடார் உறவின்முறை சங்கம் பொதுநல மருத்துவமனை, 3 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கருப்பசாமி என்ற ராசு மற்றும் அப்துல் கலாம் ரத்ததான கழகம் மற்றும் திருநெல்வேலி அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தினர். இந்த முகாமிற்கு பொதுநல மருத்துவமனை செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார், தலைவர் திலகரத்தினம் இந்த முகாமை தொடக்கி […]
கோவில்பட்டி அரசு மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இருக்கும். நேற்று இரவு 7 மணி அளவில் டாக்டர் சங்கீதா பணியில் இருந்தார். அப்போது 3 பெண்கள் சத்தமாக பேசிக்கொண்டு மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தனர். அவர்களிடம் டாக்டர் சங்கீதா, சத்தம் போடாதீர்கள் என்று கண்டித்தார். அப்போது அவர்கள் நாங்கள் சென்னையில் இருந்து வந்து இருக்கிறோம், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஒருவரை பார்க்கவேண்டும் என்று கூறினார்கள். அதற்கு பார்வையாளர் நேரம் முடிந்து விட்டது என்று கூறி டாக்டர் அனுமதி மறுத்தார். […]
கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் மாணவ, மாணவிகளுக்காக `வேடிக்கை கலைஞர்’ என்ற பெயரில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது., ஜே.சி.பவன் கட்டிடத்தில் 10 வயதுக்கு உட்பட்டோர், 11 ,முதல் 15 வயது வரையிலானவர்கள், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது,. இதற்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ.சேர்மன் டி.தீபன்ராஜ் செய்திருந்தார். இவர்களுக்கு முறையே இயற்கை காட்சியமைப்பு, கார்ட்டூன் பாத்திரம், பச்சையாக செல்லுங்கள் ஆகிய தலைப்புகளில் ஓவியம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. நேற்று காலை 9 மணி முதல் முதல் […]
*அட்சய திருதியை என்பது ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் கொண்டாடப் படுகிறது. அட்சயம் என்ற சொல்லுக்கு `குறைவற்றது` என்று பொருள். அட்சய திருதியை நாளில் எந்த நற்செயல் செய்தாலும் அது குறைவற்றுப் பெருகும் என்பது நம் ஆன்மிக நம்பிக்கை. கோயில்களுக்குச் செல்வது, ஜபதபங்கள் செய்வது போன்ற புண்ணியச் செயல்களுக்கெல்லாம் அன்று வழக்கத்தை விடப் பல மடங்கு பலன் கிட்டும். ஆனால் அட்சய திருதியை என்றாலே கடைக்குப் போய் […]
சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன.இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும்.இவை அனைத்தும் […]
திருவிளக்கு வழிபாட்டின் போது பெண்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் மற்றும் கிடைக்கும் பலன்கள் வருமாறு:- *.திருவிளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும் *திருவிளக்கு வழிபாட்டின் போது எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பின்னமடைந்த (உடைந்த, கீறல் விழுந்த) விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. *ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும் *இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும் *மூன்று […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய தலைவர் பிரபாகர் முன்னிலையில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு நேற்று மாலை அணிவித்தார்கள் இந்நிகழ்ச்சியில் மாநில சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன் எம்.எல்.ஏ., திருநெல்வேலி மாவட்ட தலைவர் தயாசங்கர், மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
பலத்த எதிர்ப்புக்கு இடையே கோவில்பட்டி மார்க்கெட் கடைகள் இடிப்பு; இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட
கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி கடைகள். பழக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தன, கொவில்பட்ட்டி மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களும் இங்கு வந்து காய்கறி வாங்கி செல்வது வழக்கம். எப்போது பரபரப்புடன் காணப்படும் இந்த மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உருவாக்கி விட்டன. கடைகள் எண்ணிகையானது நகராட்சி பட்டியலை விட அதிகமாகி விட்டன, நடைபாதை கடைகளும் முளைத்து விட்டன, இதன் காரணமாக […]
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்ட நடவடிகிகைகளுக்கு நான் தயார் என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மேற்கண்டவாறு அறிக்கையில் அண்ணாமலை கூறி இருக்கிறார்
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழகத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு தொடர்ந்து தடை விதித்து வந்தது.இந்த தடை உத்தரவுக்கு எதிராக இந்த அமைப்பு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நாடியதை தொடர்ந்து தடைக்கு விலக்கு பெறப்பட்டது இதனை தொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து […]







