• May 9, 2024

கோவில்பட்டியில் ஓவியபோட்டி; மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு

 கோவில்பட்டியில் ஓவியபோட்டி; மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு

கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் மாணவ, மாணவிகளுக்காக  `வேடிக்கை கலைஞர்’ என்ற பெயரில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது., ஜே.சி.பவன் கட்டிடத்தில்   10 வயதுக்கு உட்பட்டோர், 11 ,முதல் 15 வயது வரையிலானவர்கள், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது,. இதற்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ.சேர்மன் டி.தீபன்ராஜ் செய்திருந்தார்.

இவர்களுக்கு முறையே இயற்கை காட்சியமைப்பு, கார்ட்டூன் பாத்திரம், பச்சையாக செல்லுங்கள் ஆகிய தலைப்புகளில் ஓவியம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. நேற்று காலை 9 மணி முதல் முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட்டது, இந்த போட்டியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\

போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்ட தீம் வரைய ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டது,. போட்டிகள் முடிந்ததும் மாலையில் பரிசளிப்பு விழா நடந்து. நீதிபதிகள் தேர்வு செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே முதல் பரிசாக ரூ,1,500, இரண்டாவது பரிசாக ரூ,. 1000, மூன்றாவது பரிசாக ரூ.750 வழங்கப்பட்டது.

பரிசு பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

10 வயதுக்கு உட்பட்டோர்

முதல் பரிசு- பி.கே.உமேஷ்(ஸ்ரீகரா வித்யா மந்திர்) 2- ம் பரிசு – எம்.ஹாசினி( CARM பள்ளி, விளாத்திகுளம்) 3-ம் பரிசு- எஸ்.சிவ பிரணவ் (ஸ்ரீகரா வித்யா மந்திர்)

11 ,முதல் 15 வயது வரையிலானவர்கள்

முதல் பரிசு-ஜி.ஜனனி ஸ்ரீ(கே.ஆர்.எ.வித்யாலயா) 2- ம் பரிசு- எஸ்.ஆர்.நெதன்யா (பிருந்தாவன் கிட்ஸ் யுனிவர்சிட்டி)  3-ம் பரிசு- எஸ்.சமீரா (ஸ்ரீகரா வித்யா மந்திர்)

15 வயதுக்கு மேற்பட்டவர்கள்

முதல் பரிசு- எம்.வித்யாலட்சுமி  2-ம் பரிசு- டி.தபிதா ஸ்ரீ, 3-ம்பரிசு –கே.ஸ்ரீதேவி (ஸ்ரீகரா வித்யா மந்திர்)

பரிசளிப்பு விழாவுக்கு கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவர் டி.தீபன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஓவிய கலைஞரும், சிற்பியுமான சி.செல்வகுமார் கலந்து கொண்டார். அவர் ஓவியபோட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் ஜே.சி.ஐ. இணை செயலாளர் ஐ.அருண்பிரசாத், பொருளாளர் விஜயகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *