சுந்தரலிங்கனார் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய தலைவர் பிரபாகர் முன்னிலையில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு நேற்று மாலை அணிவித்தார்கள்
இந்நிகழ்ச்சியில் மாநில சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன் எம்.எல்.ஏ., திருநெல்வேலி மாவட்ட தலைவர் தயாசங்கர், மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்







