நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உணவு பூங்கா அமைப்பது தொடர்பாக முதலீட்டாளர்களுடனான 4-வது ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் மதுமதி தலைமை தாங்கினார். மாநில வேளாண்மை விற்பனை வாரிய தலைமை செயல் அலுவலர் நடராஜன், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேளாண்மை இயக்குனர் மதுமதி கூறியதாவது:- மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘பிரதான் மந்திரி […]
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தில் தமிழ்நாடு கூட்டுறவு துஒட்டநத்தம்றையின் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை, கூட்டுறவு கடன் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து புதிய கூட்டுறவு சங்க உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி […]
தமிழகத்தில் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 8 ஆயிரத்து 349 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 5 ஆயிரத்து 267 பேர் தேர்வு நேற்று எழுத வந்திருந்தனர். 3 ஆயிரத்து 82 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வை கண்காணிக்க 3 பறக்கும்படை குழுக்களும், 7 நடமாடும் குழுக்களும், 26 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி சக்தி […]
கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் ;
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ டெல்லியில் மத்திய|ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது :- கோவில்பட்டி மற்றும் கடம்பூர் ரெயில்வே நிலையத்தில் சில ரெயில்கள் நிற்காமல் செல்லும் நிலை உள்ளதால் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும், மின்தூக்கி மற்றும் எக்ஸ்லேட்டர் அமைக்க வேண்டும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் […]
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்த ஜெகதீசன் (65), என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சில திருநங்கைகள் ஜெகதீசனிடம் பணம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கைகள் ஜெகதீசனை தாக்கி அவரது பைக் மற்றும் சாவியை பறித்தனர். மேலும் அங்கு இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சசீருதின் (33) என்பவரையும் அடித்து அவரிடம் இருந்த செல்போனையும் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.காமராஜ், இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஆர்.காமராஜ் இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தமிழக காங்கிரசை பொருத்தவரை வசதி படைத்தவர்களுக்கு வாய்ப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அந்த மாவட்டத்தில் நடந்த சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவன் சென்று கேட்டபோது, காங்கிரஸ் கட்சிக்காரர்களையே சில குண்டர்களால் காயங்கள் ஏற்படுத்தும் வகையில் […]
தமிழகத்தில் 2019 – 2020ம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற கோரிய வழக்கில் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது .விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.மேலும் இயல்-இசை-நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் […]
கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் காசிராஜன் (வயது 59). விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த உளுந்து, மக்காச்சோளத்தை புது அப்பனேரியை சேர்ந்த ஜீ. முனிஸ்வரன் (50) என்ற வியாபாரியிடம், கடந்த 2020 ஜூன் 8-ந் தேதி முதல் ஜூலை 29-ந் தேதி வரை ரூ.10 லட்சத்து 13 ஆயிரத்து 460-க்கு விற்பனை செய்துள்ளார்.இதற்காக வியாபாரி முனீஸ்வரன், காசிராஜன் வங்கிக் கணக்கில் ஜூலை 24-ந்தேதி முதல் அக்.16-ந் தேதி வரை ரூ.8 லட்சத்து […]
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களுக்கு ,21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும். திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால்,அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும். திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும்,பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர்,சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால்,அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு […]
கப்பலோட்டிய தமிழன், விடுதலை வீரர், செக்கு இழுத்த செங்கோடன், வ.உ.சிதம்பரனாரின் 86 வது நினைவு தினம் இன்று (18.11.2022) அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி கோவில்பட்டியில் வசிக்கும் வ.உ.சி.யின் கொள்ளு பேத்தி செல்வி முருகானந்தம் வீட்டில் வ.உ.சி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.வழக்கறிஞர் முருகானந்தம், மோனிஷா. சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜ் பாண்டியன்,மாரிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. யின் திருவுருவ சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை […]







