கோவில்பட்டி, தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்
கப்பலோட்டிய தமிழன், விடுதலை வீரர், செக்கு இழுத்த செங்கோடன், வ.உ.சிதம்பரனாரின் 86 வது நினைவு தினம் இன்று (18.11.2022) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவில்பட்டியில் வசிக்கும் வ.உ.சி.யின் கொள்ளு பேத்தி செல்வி முருகானந்தம் வீட்டில் வ.உ.சி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வழக்கறிஞர் முருகானந்தம், மோனிஷா. சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜ் பாண்டியன்,மாரிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. யின் திருவுருவ சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள வ உ சிதம்பரனார் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் வ உ சிதம்பரனார் பொது நூலகத்தை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர்.நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் .பாண்டியராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், வஉசி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.