கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற இருக்கிறது. நாளை 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் போட்டிகள் நடைபெறுகின்றன, இப்போட்டியின் தொடக்க விழா மே 18ம் தேதி (நாளை) மாலை 5. மணி அளவில் நடைபெற […]
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கழுகுமலை உள்வட்டம் ஜமீன் தேவர்குளம், கே. வெங்கடேஸ்வரபுரம், கழுகுமலை, வில்லிசேரி, இடைசெவல், வானரமுட்டி பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா முகாமிற்கு தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அவரிடம் 32 மனுக்கள் கொடுக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கோவில்பட்டி தாசில்தார் வசந்த மல்லிகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று (புதன் கிழமை) கழுகுமலை உள்வட்டம் நாலாட்டின் புத்தூர், முடுக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி.காலனியில் உள்ள ஸ்ரீ அம்மச்சியார் திருக்கோவில் திருவிழாவினை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது :-திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் போதை விற்பனை செய்யும் சந்தையாக (மாநிலமாக) மாறி விட்டது.சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானியக்கோரிக்கையில் இது குறித்து புள்ளி விபரங்களுடன் முன்னாள் முதல்வரும் […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழ் ஈரால் – மஞ்ச நாயக்கன்பட்டி இடையே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் பஸ் (அரவிந்த்) மோதி விபத்துக்குள்ளானது.இதில் பஸ்சின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. பஸ்சில் பயணம் செய்த 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.காயம் அடைந்த பயணிகள் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஜே.சி.ஐ அமைப்பின் துணை அமைப்பான ஜே.காம். ,வர்த்தக இணைப்புக்கான ஒரு அங்கமாக திகழ்கிறது. கோவில்பட்டி ஜே.காம் அமைப்பின் இந்த மாத 3-வது வார வர்த்தக கற்றல் கூட்டம் இன்று காலை எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிறுதொழில் தீப்பெட்டி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. ஜே,காம் சேர்மன் அருண்பிரசாத் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுரேந்தர், திருநெல்வேலி ஜே.காம் பயிற்சியாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டியை சேர்ந்த மித்ரா சாப்ட்வேர் நிறுவனர் சரவணமுத்து கலந்து கொண்டார். […]
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை ) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையங்கள் மற்றும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம். கோவில்பட்டி:- கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி உமா(57). இவர் நேற்றிரவு வெப்பத்தின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் இருக்க முடியமால் காற்று வாங்க வீட்டின் வெளியே நாற்காலி போட்டு அமர்ந்து இருந்தார் . அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மின்னல்வேகத்தில் உமா கழுத்தில் இருந்து 12 பவுன் தங்கநகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். நகையை பறிகொடுத்த உமா, கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதே போல் கோவில்பட்டி வ.உ.சி. […]
கோவில்பட்டியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. sc/st மாநில துணை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார் கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், பி. எஸ். என். எல் .துரைராஜ் மாவட்ட செயலாளர், sc/st பிரிவு மாவட்ட தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் மாறன் மருத்துவ அணி மாவட்ட தலைவர், காங்கிரஸ் […]
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது.பொதுநல மருத்துவமனை, நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமை நடத்தின.பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி. திலகரத்தினம் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் ஆர்.ஏ.அய்யனார், மருத்துவமனை செயலாளர் எம்.தங்கராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். முகாமை நகர தி.மு.க. […]
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,ரோட்டரி கிளப் ஆப் கோவில்பட்டி, ஜே.சி.ஐ சார்பில் புத்தக கண்காட்சி துவக்க விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. புத்தக கண்காட்சியில் இலக்கியம்,வரலாறு,நாவல், சட்டம்,மருத்துவம், அறிவியல், அரசியல்,போட்டித் தேர்வு நூல்கள், உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.புத்தக கண்காட்சி மே 30ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி உண்டு.புத்தக […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







