கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி போட்டி; நாளை தொடக்கம்
கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற இருக்கிறது.
நாளை 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் போட்டிகள் நடைபெறுகின்றன,
இப்போட்டியின் தொடக்க விழா மே 18ம் தேதி (நாளை) மாலை 5. மணி அளவில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பெங்களூரு ரெயில் வீல் பேக்டரி,பம்போஷ் நிஸ்வாஸ் ஆக்கி அணி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மும்பை யூனியன் வங்கி, சவுத் சென்ட்ரல் ரெயில்வே, ஹூப்ளி மேற்கத்திய ரெயில்வே, அணி, சென்னை இந்தியன் வங்கி, கனரா பேங்க் பெங்களூரு, புனே கஸ்டம்ஸ், சென்னை தமிழ்நாடு போலீஸ், – சென்னை, ஜி.எஸ்.டி. அண்ட் சென்ட்ரல் எக்சைஸ், எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் – கோவில்பட்டி உள்ளிட்ட அணிகள் விளையாட உள்ளன,

இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ளும் அணி வீரர்கள் அனைவருக்கும் போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு அனைத்தும் அறக்கட்டளையினரால் வழங்கப்படுகிறது.
தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு போட்டியும் மாலை 4.30 மணிக்கு ஒரு போட்டியும் 6.30 மணிக்கு மற்றொரு போட்டியும் இரவு 8.15 மணிக்கு இன்னொரு போட்டியும் என மொத்தம் நான்கு போட்டிகள் தினமும் நடைபெற உள்ளன. போட்டிகளை காண்பதற்கு ரசிகர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 1 லட்சம், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.75,000, மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரம் , நான்காவது இடம் பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பரிசுடன் லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 20 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.
நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
போட்டி அட்டவணை வருமாறு:








