கர்நாடக தேர்தல் வெற்றி : கோவில்பட்டியில் காங்கிரசார் கொண்டாட்டம்

கோவில்பட்டியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

sc/st மாநில துணை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார் கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர்
அருண்பாண்டியன், பி. எஸ். என். எல் .துரைராஜ் மாவட்ட செயலாளர், sc/st பிரிவு மாவட்ட தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் மாறன் மருத்துவ அணி மாவட்ட தலைவர், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, உமாசங்கர், ஐ. என் . டி. யு. சி.ராஜசேகரன், ஜோஷ்வா மாவட்டசெயலாளர், நேதாஜி காளிதாசன் நகர தலைவர் sc/st பிரிவு விஜய் வட்டார தலைவர், முன்னாள் மாவட்டதலைவர் முத்து, நகர துணை தலைவர் கிருஷ்துராஜா, பழனி சாமி, மகேந்திரன், ஆறுமுகம், சண்முகவேல், வேல்சாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
