தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் முத்துப்பாண்டி (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். முத்துப்பாண்டி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். மேலும், பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில், உள்ள தனது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தார்.அப்போது வீரபாண்டி நகரை சேர்ந்த அந்தோணி மகன் மணிகண்டன் (27) என்பவர் வீட்டிற்கு வந்தார். இருவரும் சேர்ந்து மது குடித்தார்களாம். […]
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அந்த சமுதாய மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 4 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் என்ஜினியரிங் கட் ஆப் 200/200 பெற்று. கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் ஏ.சஞ்சய் 587 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பிடித்து சாதனை […]
தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு குழு கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் செயலாளர்,தென் இந்தியா தீப் பெட்டி உட்பத்தியாளர் கள் சங்கம் தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தீப்பெட்டி ஆலை மற்றும் ஆலையை சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.தீயணைப்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் டாக்டர் ச. மாரியப்பனுக்கு வாட்ஸ்ஆப் மூலம் புகாா் வந்ததையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கயத்தாறு ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொ) ஜோதிபாசு, சம்பந்தப்பட்ட ஐஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தி அறிக்கை அளித்தாா். அதன்பேரில், அந்த ஐஸ் நிறுவனத்துக்கு எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தும் தொடா்ந்து சுகாதார குறைபாடுடன செல்படுவது தெரியவந்தது. இதையடுத்து நியமன அலுவலா் உத்தரவின்படி, காவல் துறை பாதுகாப்புடன் அந்நிறுவனம் மூடி சீலிடப்பட்டது. அதன் உரிமையாளா் […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 7 நாட்கள் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தனித்தனியாக நடந்தது. பயிற்சியாளர்களாக முதுகலை ஆங்கில ஆசிரியர் ஜான் ஸ்டேனி, அரசியல் அறிவியல் முதுகலை ஆசிரியர் குணசேகரன், மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கவிதா, ரமேஷ்,உடற்கல்வி ஆசிரியை நர்மதா ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான அடிப்படை பயிற்சி மற்றும் யோகா […]
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பெத்தேல் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. காந்தி நகரை சேர்ந்த முருகன் பார் நடத்தி வருகிறார். இந்த பாரில் இந்திரா நகரை சேர்ந்த குருசாமி (வயது 60) என்பவர் வேலை பார்த்து வந்தார். கயத்தாறு சிதம்பரம்பட்டியை சேர்ந்த மூக்கையா பாண்டியன் என்பவர் கடந்த சில தினங்களாக வந்து மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். வழக்கம்போல இன்று மதியம் 2 மணியளவில் டாஸ்மாக் பாருக்கு வந்த மூக்கையா பாண்டியன், மது […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர் சார்பில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் எதிர்புறம் உள்ள கலையரங்கில் நடத்தப்பட்டது. மேலும் அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் 10 வது நாள் நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை )பொங்கல் விழா நடந்தது. அதிகாலையில் தெற்கு நந்தவனம் சென்று புனித நீர் எடுத்து வந்து […]
பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டு மே 6ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 460 மாணவிகள் தேர்வு எழுதினர்.இதில் 433 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் மாணவி குருநந்தினி 582 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி அளவில் சாதனை படைத்துள்ளார். மாணவி கனிகா 569 மதிப்பெண்களும், மாணவி ஹரிணி 557 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 4 மாணவிகள் தலா ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் […]
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கோவில்பட்டி நாடார் மேல் நிலை பள்ளியில் படித்த 311 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள்n302 பேர். தேர்ச்சி சதவீதம் 97% கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 14 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6 […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் திருவிழாவின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. காலை 7மணிக்கு திருத்தலவளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் மேல இலந்தைகுளம் பங்குதந்தை ஜெயபாலன்,கோவில்பட்டி உதவிபங்குதந்தை அந்தோணிராஜ், காமநாயக்கன்பட்டி உதவி பங்குத்தந்தை செல்வின் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றி 15 பேருக்கு புது நன்மை வழங்கினார்கள். மாலை 6.30 மணியளவில் ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி இறையியல் கல்லூரி பேராசிரியர் அந்தோணிராஜ், கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல உதவி பங்குதந்தை அந்தோணிராஜ் இணைந்து […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







