• May 20, 2024

கோவில்பட்டி சித்திரை திருவிழா: பத்தி ரகாளியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

 கோவில்பட்டி சித்திரை திருவிழா: பத்தி ரகாளியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம்

 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர் சார்பில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் எதிர்புறம் உள்ள கலையரங்கில்  நடத்தப்பட்டது. மேலும் அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.

திருவிழாவின் 10 வது நாள் நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை )பொங்கல் விழா நடந்தது.

அதிகாலையில் தெற்கு நந்தவனம் சென்று புனித நீர் எடுத்து வந்து கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. 

மாலை 6 மணிக்கு மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் கோவிலை சுற்றி முளைப்பாரி ஊர்வலத்துடன் பவனி உலா வருதல் தொடங்கியது.

இரவு 7 மணிக்கு மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகள் நிகழ, முளைப்பாரி திருவிழா மற்றும் வானவேடிக்கை நடைபெறுகிறது. 

பின்னர் மேளதாளத்துடன் முளைப்பாரிகள் நந்தவனம் கொண்டு சேர்த்தல் நடைபெறும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *