பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
கன மழையின் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.பழைய குற்றால அருவிக்கு மேல் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் அதிக அளவு மழை பெய்ததன் காரணமாக நேற்று இரவு முதல் பழைய குற்றாலம் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், வெள்ளப்பெருக்கை கண்டதும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.



பெண்கள் தங்கள் சிறு பிள்ளைகளை இழுத்துக் கொண்டும் தூக்கிக் கொண்டும் அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து அருவியில் இருந்து வெளிப்பட்ட தண்ணீர்விரைந்து ஓடி வந்தது.இதை கண்ட சுற்றுலா பயணிகள் மேலும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஏற்கனவே அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு சாதனங்களுடன் அருவியை. ஏற்கனவே பெரும்பாலானவர்கள் அருகில் இருந்து பத்திரமாக வெளியேறி விட்டார்கள். சிலர் அருவி அருகே சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.அவர்களை மீண்டும் பணியில் தீயணைப்பு படையினர் முமாரமாக ஈடுபட்டனர்.
இதையடுத்து மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.







