சென்னை, வரா பியூச்சர்ஸ் எல்எல்பி லிமிடெட் நிறுவன நிதியுதவியுடன் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை, பிரீடம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நவீன செயற்கை கால், கை அளவீடு செய்யும் இலவச முகாமை கடந்த 9.5.2024 மற்றும் 12.5.2024 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடத்தியது. விபத்து மற்றும் போலியாவால் பாதிக்கப்பட்டு கை மற்றும் கால் இழந்த மாற்று திறனாளிகளுக்கு உதவ ஓர் புதிய முயற்சியாக நடத்தப்பட்ட இம்முகாம்களில் கலந்து கொண்டு அளவீடு செய்த பயனாளிகளுக்கு […]
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் ( ஜூன் 7,8,9 ) நடைபெறுகிறது இன்று காலையில் முதல் போட்டியை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் அறநிலை துறை உறுப்பினர் சண்முகராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் சண்முகராஜா மற்றும் யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் வீரர்களை […]
கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (வயது 50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் மீன்கடை நடத்தி வந்தார். பகலில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை இரவு வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கினார். அவருடன் சாமி என்பவரும் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் இருவரும் அயர்ந்து தூங்கிய சமயத்தில் சில மர்ம நபர்கள்அங்கு வந்தனர். அவர்கள் […]
நாடு முழுவதும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாத்திட உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுற்றுப்புற சூழல் தின நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த வலியுறுத்தியும்,பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தும்.சுற்றுச்சூழலை பாதுகாத்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்பிரகாஷ் ராஜன் தலைமை தாங்கினார்., பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா முன்னிலை வகித்தார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் கடந்த ராபி புரட்டாசி பட்டத்தில் பயறு வகைகள், பயிர்வகைகள், எண்ணெய் வித்துக்கள், பணப்பயிர்கள் போன்றவைகள் பயிரிட்டனர். டிசம்பர் மாத பெய்த பெருமழைக்கு பயிர்கள் கடுமையாக சேதமடைந்து விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இந்நிலையில் கோடையில் கிணற்றுப்பாசனம் மூலம் பருத்தி, சீனி அவரை, வெள்ளரி, காய்கனிகள் பயிரிட்டு உள்ளனர். குறைந்த நாள் பயிரான கம்பு கோவில்பட்டி, கடலையூர், லிங்கம்பட்டி, எட்டையபுரம், புதூர், முத்துலாபுரம் போன்ற பகுதிகளில் அதிகளவில் பயிரிட்டு […]
கோவில்பட்டி இந்திரா நகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் இயற்கை மருத்துவ முறை செயல்விளக்கப்பயிற்சி முகாம் நடந்தது. நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்தும் இயற்கை மருத்துவத்தில் கண் குவளை மூலம் கண்களை சுத்தம் செய்தல், மூக்கு குவளை மூலம் மூக்கை சுத்தம் செய்தல் குறித்து செயல் விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா தலைமை தாங்கினார். பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். கல்லூரி ஆசிரியர் பூபதி வரவேற்றார். […]
கோவில்பட்டி இனாம்மணியாச்சி சந்திப்பு பகுதியில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 101வது பிறந்தநாள்விழா கொண்டாடபட்டது. திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் ஏற்பாட்டில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் கோவில்பட்டி யூனியன்சேர்மன் கஸ்தூரிசுப்புராஜ்,மேற்கு ஒன்றியசெயலாளர் ராதாகிருஷ்ணன்,செயற்குழுஉறுப்பினர் ராதாகிருஷ்ணன்,வக்கீல் அழகர்சாமி,மாவட்ட ஒன்றிய மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்திய இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13 -வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி தொடங்கியது. கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் 10 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் […]
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி தொடங்கியது. கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியின் 9 ம் நாளான இன்று 1.6.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு முதல் அரையிறுதி போட்டி நடந்தது. […]
கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்கம் சார்பில் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தேவர் கல்யாண மண்டபத்தில் நடந்தது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேவர் சமூக நலச்சங்கத்தின் தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வேல்முருகன்,பொருளாளர் கார்மேக பாண்டியன், காவல்துறை முன்னாள் அலுவலர் ராஜு.ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் டாக்டர் ராம்குமார்,திரைப்பட […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







