கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம் : மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை 

 கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம் : மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை 

கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (வயது 50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் மீன்கடை நடத்தி வந்தார்.

பகலில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை இரவு வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கினார். அவருடன் சாமி என்பவரும் தூங்கி கொண்டிருந்தார்.

 

 நள்ளிரவில்  இருவரும் அயர்ந்து தூங்கிய சமயத்தில் சில மர்ம நபர்கள்அங்கு வந்தனர்.

அவர்கள் தூங்கி கொண்டிருந்த வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி இருவரையும் சரமாரியாக அறிவாளால் வெட்டினர்கள்.

அரிவாள் வெட்டு விழுந்ததும் திடுக்கிட்டு எழுந்த இருவரும், சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து அரிவாள் வெட்டு விழுந்ததால் தப்பிக்க முடியாமல் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தனர்.

கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் இறந்து போனார். இதையடுத்து  இருவர் உடல்களும் உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன . 

இதுகுறித்து தகவல் கிடைத்ததும்  தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். துப்பறியும் மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு துப்பு துலாக்கப்பட்டது

இரட்டை கொலைக்கான காரணம் தெரியவில்லை. முன் விரோதம் காரணமாக வெள்ளைத்துரையை கொலை செய்ய வந்த கும்பல், உடன் இருந்த சாமி அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதற்காக அவரையும் வெட்டி கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இரட்டை  கொலை சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *