7,8 தேதிகளில் நடக்க இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வு திடீர் ஒத்திவைப்பு

 7,8 தேதிகளில் நடக்க இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வு திடீர் ஒத்திவைப்பு

நாளையும் நாளை மறுநாளும் (7.8 தேதிகள்) ஆன்லைன் மூலம் திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைககழகத்தின் மூலம்  உதவி பேராசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது,

ஏற்கனவே கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தி வந்த இந்த தேர்வை இந்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

தகுதி தேர்வில் கலந்து கொள்வதற்காக 99 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில்  உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டு உள்ளது.

தொழில்நுட்ப காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் அறிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *