மாநில அளவிலான சமூக தணிக்கை கருத்தரங்கு
![மாநில அளவிலான சமூக தணிக்கை கருத்தரங்கு](https://tn96news.com/wp-content/uploads/2024/06/IMG-20240607-WA0322-850x560.jpg)
தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் சார்பில் சமூக தணிக்கை மாநில அளவிலான கருத்தரங்கு திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்.சத்துணவு திட்டம் ஆகிய திட்டங்களை சமூக தணிக்கை மேற்கொள்வது குறித்து மாவட்ட,வட்டார வளப் பயிற்றுனர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக அரசின்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா தலைமை தாங்கினார்.தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் இயக்குனர் கிளாஸ்டன் புஷ்பராஜ் சமூகத்தணிக்கை குறித்த அறிமுக உரையாற்றினார். மண்டல இணை இயக்குனர் ராஜசேகர் வரவேற்றார்.
சமூக தணிக்கை தர நிலைகள் குறித்து முன்னாள் முதுநிலை தணிக்கை அலுவலர் ரவி,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து கூடுதல் இயக்குனர் குமார்,தமிழ்நாடு நதி மறு சீரமைப்பு திட்ட இயக்குனர் சந்திரசேகரன்குப்பன்,ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்து கூடுதல் இயக்குனர் ராஜஸ்ரீ,ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்,தானம் பவுண்டேஷன் மதன்குமார், சிங்கராயர்,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் குறித்து இணை இயக்குனர் ஜெயலட்சுமி,உதவி இயக்குனர் டார்த்தி,கல்வியாளர் மணிவண்ணன்,சத்துணவு அமைப்பாளர் கவியரசன்,சமூக தணிக்கை செயல்படுத்தும் முறை குறித்து வடக்கு மண்டல இணை இயக்குனர் சுப்பிரமணியன்,மாவட்ட வள பயிற்றுநர்கள் மணி, சுந்தர்ராஜன்,சேகர்,ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாவட்ட வட்டார வள பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட வள பயிற்றுநர் அசோக்குமார் நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)