கோவில்பட்டி பாண்டவர் மங்கலத்தில் மாநில  ஆக்கி போட்டி தொடக்கம்; முதல் நாளில் 8 ஆட்டம் 

 கோவில்பட்டி பாண்டவர் மங்கலத்தில் மாநில  ஆக்கி போட்டி தொடக்கம்; முதல் நாளில் 8 ஆட்டம் 

கோவில்பட்டி  யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் ( ஜூன் 7,8,9 ) நடைபெறுகிறது

இன்று காலையில் முதல் போட்டியை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் அறநிலை துறை உறுப்பினர் சண்முகராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கோவில்பட்டி நகர்மன்ற  உறுப்பினர் சண்முகராஜா மற்றும் யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இப் போட்டியில் மொத்தம் 21 அணிகள்   கலந்துகொண்டு விளையாடுகின்றன முதல் போட்டியில்  கூசாலிபட்டி AMC அணியினர் திட்டன்குளம் ஆக்கி அணியினரை  3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றனர்.

 அடுத்த ஆட்டத்தில் ராஜபாளையம் பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆக்கி அணியினர் கோவில்பட்டி ஹாக்கி கிளப் அணியினரை 6-0  என்ற  கோல் கணக்கில் வீழ்த்தினர்.

மூன்றாவது போட்டியில் இலுப்பையூரணி ஆக்கி அணி  3-2 என்ற  கோல் கணக்கில்  கன்னியாகுமரி அணியினரை தோற்கடித்தனர்.

நான்காவது போட்டியில் பாண்டவர்மங்கலம்  ஹாக்கி கிளப்  அணியினர்  2-1 என்ற  கோல் கணக்கில்  சிவகாசி அணியினரை வென்றனர்.

ஐந்தாவது ஆட்டத்தில் சேலம் ஹாக்கி அணி 3-1  என்று  கோல் கணக்கில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அணியினரை வீழ்த்தத்தினர்.

மாலையில் நடைபெற்ற முதல் போட்டியில் கோவில்பட்டி அம்பேத்கர் ஆக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியினரை வீழ்த்தினர்

இரண்டாவது ஆட்டத்தில் ராஜபாளையம் யாழினி ஹாக்கி கிளப் அணியினர் கோவில்பட்டி பாரதி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

மூன்றாவது போட்டியில் கூசாலிப்பட்டி AMC அணியினர் 2-0 என்ற  கோல் கணக்கில் சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் அணியினரை வென்றனர்.

இன்று நடந்த போட்டியில் நடுவர்களாக அஸ்வின், பாலமுருகன் , மூர்த்தி, கார்த்திக் ராஜா ,மதன் குமார் , மதனா சண்முகப்பிரியா, அஜித் ,ஆகியோர் செயல்பட்டனர்

 நாளையும் நாளை மறுநாளும் போட்டிகள் நடைபெறும். ஞாயிறு மாலை இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது.

போட்டியின் இயக்குனரான திருச்செல்வம் மற்றும் யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் செயலாளர் மாரியப்பன், சண்முகராஜா, மணிராஜ் முனியராஜ் , கருப்பசாமி, பெரியசாமி, மதன்  விஜய் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *