கோவில்பட்டியில் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்கம் சார்பில் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தேவர் கல்யாண மண்டபத்தில் நடந்தது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தேவர் சமூக நலச்சங்கத்தின் தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வேல்முருகன்,பொருளாளர் கார்மேக பாண்டியன், காவல்துறை முன்னாள் அலுவலர் ராஜு.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் டாக்டர் ராம்குமார்,திரைப்பட தயாரிப்பாளர் சவுத்ரிதேவர்,செண்பக ராஜன் நினைவு தொடக்கப்பள்ளி நிறுவனர் சிவ கணேஷ்குமார்,ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் அய்யனேரி ஊராட்சி மன்றதலைவர் காளியப்பன், தேவர் சமூக நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் சங்க துணைச் செயலாளர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். இன்னொரு துணைச்செயலாளர் செண்பகராஜ் நன்றி கூறினார்.







