கோவில்பட்டியில் கருணாநிதி பிறந்தநாள் விழா
கோவில்பட்டி இனாம்மணியாச்சி சந்திப்பு பகுதியில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 101வது பிறந்தநாள்விழா கொண்டாடபட்டது.
திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் ஏற்பாட்டில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது,
நிகழ்ச்சியில் கோவில்பட்டி யூனியன்சேர்மன் கஸ்தூரிசுப்புராஜ்,மேற்கு ஒன்றியசெயலாளர் ராதாகிருஷ்ணன்,செயற்குழுஉறுப்பினர் ராதாகிருஷ்ணன்,வக்கீல் அழகர்சாமி,மாவட்ட ஒன்றிய மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்