தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்
தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
இந்திய பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை(4-ந் தேதி) நடைபெறுகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை வ.உ.சி.,கல்லூரியில் நடக்கிறது.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







