அகில இந்திய ஆக்கி :அரை இறுதியில் வெற்றி பெற்று போபால் – புபனேஸ்வர் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி 

 அகில இந்திய ஆக்கி :அரை இறுதியில் வெற்றி பெற்று போபால் – புபனேஸ்வர் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி 

கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13 வது அகில இந்திய  ஆக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி தொடங்கியது.

கோவில்பட்டி செயற்கை  புல்வெளி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16  அணிகள் பங்கேற்று விளையாடின. 

போட்டியின் 9 ம் நாளான இன்று 1.6.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு முதல் அரையிறுதி போட்டி நடந்தது.

முதல் ஆட்டத்தில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும், போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும் மோதின. 

போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணி வீரர் சுனித் லக்ரா (4 மற்றும் 54வது நிமிடங்கள் – பீல்டு கோல்), அமந்தீப் லக்ரா (25 மற்றும் 59வது நிமிடங்கள் – பெனால்டி கார்னர்) ஆகியோர் தலா இரு கோல்கள்  போட்டனர்.

6 மற்றும் 16-வது நிமிடங்களில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர்கள் அர்மான் குரேஷி (பெனால்டி கார்னர்), மற்றும் உத்தப்பா (பீல்டு கோல்) ஆகியோர் முறையே தலா ஒரு கோல் போட்டனர். 

இறுதியில் இதில் 4:2 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

சுரேஷ் குமார்,பிரியாஸ் கவுடா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர் சுனித் லக்ராவுக்கு வழங்கப்பட்டது.  

புபனேஸ்வர் அணி 

மாலை 7.30 மணிக்கு நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் புபனேஸ்வர்  நிஸ்வாஸ் அணியும் களம் கண்டன.

20-வது நிமிடத்தில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வீரர் சுதீப் மின்ஸ் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.

21-வது நிமிடத்தில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வீரர் மத்தியாஸ் டாங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.

 22 மற்றும் 48-வது நிமிடங்களில் பெங்களூரு கனரா பேங்க் அணி வீரர் நிக்கின் திம்மையா பீல்டு கோல் முறையில் இரு கோல்கள் போட்டார்.

இதனால் 2:2 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

அதில் 2:1 என்ற கோல் கணக்கில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

சுரேஷ் குமார்  மற்றும் அஸ்வனி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர் சிறந்த ஆட்டக்காரர் விருது புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வீரர் திலீப் கு சா-வுக்கு வழங்கப்பட்டது.  

ஞாயிறு இறுதி போட்டி 

2.6.2024 ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.மணிக்கு நடைபெறும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதுகின்றன 

இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதுகின்றன

பரிசளிப்பு விழா 

2.6.2024 (ஞாயிற்றுக்கிழமை)  இறுதி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 1 லட்சம், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.75 ஆயிரம் , மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரம், நான்காவது இடம் பெறும் அணிக்கு ரூ 30,ஆயிரம் மற்றும் இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.

மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற 4 அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூபாய் 20,000 வீதம் வழங்கப்படுகிறது.

மேலும், நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த கோல் கீப்பர், சிறந்த பின்கள ஆட்டக்காரர், சிறந்த நடுகள ஆட்டக்காரர், சிறந்த முன்கள ஆட்டக்காரர், சிறந்த வளர்ந்து வரும் வீரர், தொடர் நாயகன் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *