விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத்திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் – ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் 16 வண்டி சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. […]
சுகாதார பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் பள்ளி மாணவி 101 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், மைக்ரோ பாயின்ட் கம்ப்யூட்டர் சென்டர் சார்பில் சுற்றுப்புற சுகாதார பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த நிகழ்ச்சிக்கு தமாகா மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். கம்ப்யூட்டர் சென்டர் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். எடுஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளி மாணவியான 10 […]
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி,லட்சுமி,சங்கரலிங்கம்,கசாலி மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி ஒன்றிய தலைவர் சிவபாலன் அனைவரையும் வரவேற்றார் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கலந்து கொண்டு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல்,ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு […]
ஜே.சி.ஐ,அமைப்பின் ஒரு அங்கமாக விளங்கும் ஜே.காம். திருநெல்வேலி டேபிள் சார்பில் 4 மாவட்ட ஜே.காம்., தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. திருநெல்வேலியில் நடந்த இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, கோவில்பட்டி, ராஜபாளையம், தென்காசி ஜே.காம்.உறுப்பினராக உள்ள தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். ஜே.காம். சேர்மன்கள் சகாய விவேக் (திருநெல்வேலி) உதயலட்சுமி(கோவில்பட்டி) லோகநாதன்(தென்காசி) லாவண்யா( ராஜபாளையம்) ஆகியோர் பேசினார்கள். பயிற்சியாளர் அருண்குமார் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் பல்வேறு தொழில் முனைவோர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு தொழில் இணைப்பு […]
கோவில்பட்டியில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிதம்பர நாடார் -காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் வெங்கடாசலம் டி. வி. எஸ். ஷோரூம் சார்பில் இரண்டு நாள் ஆடி ‘ மெகா மேளா ‘ நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜா குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் டி.வி.எஸ். கிரெடிட் பிரிவில் இருந்து மாரிமுத்து மற்றும் ஷோரூம் உரிமையாளர்கள் பங்கேற்றனர். இந்த மேளாவில் டி. வி. எஸ். வாகனங்களின் அனைத்து மாடல்களும் பொதுமக்கள் பார்வைக்கு […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்டசெயலாளர் சுரேஷ், மாநில விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆகியோர் தலைமையில் கோவில்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்கட்டண உயர்வு மற்றும் ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு விவசாயிகளுக்கான பயிர் காப்பிடு வழங்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், பொருளாlளர் ராஜன், மாவட்ட துணைசெயலாளர் சோலைராஜ் ராஜபாண்டி, செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் முருகன், முன்னிலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, பொன்ராஜ், விளாத்திகுளம் […]
கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அவருக்கு பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன, பூஜைகளை குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்தார். தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
. கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்., கோபால் நேற்று காலை 7.30 மணிக்கு தனது வீட்டில் வளரும் நாய்க்கு தடுப்பூசி போடுவதற்காக எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு வந்தார். வழக்கமாக 8 மணிக்கு திறக்க வேண்டிய கால்நடை மருத்துவமனை 8.30 மணிக்கு பின்னரும் திறக்கப்படவில்லை. அங்கு பணியாற்றும் அலுவலர்களும் யாருமில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோபால் தனது வளர்ப்பு […]
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடை காரணம் காட்டி அவற்றை வழங்காமல் நிறுத்தியதை கண்டித்தும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். […]
கோவில்பட்டி லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி சார்பில் சாலயோர வியாபாரிகளுக்கு இலவச குடைகள் வழங்கப்பட்டன. செருப்பு தைய்க்கும் தொழிலாளி, கரும்பு ஜூஸ் கடைக்காரர், எலுமிச்சை வியாபாரி உள்பட 5 பேருக்கு இந்த குடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் பட்டைய தலைவர் முருகேசன். தலைவர் முருகேஷ், செயலாளர் கண்ணன். பொருளாளர் பாலமுருகன், கிளப் அட்மின் ஜி.எம்.துரைப்பாண்டியன், ஜெயபால், பாலசுந்தர் மற்றும் கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர் .
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







