சுகாதார பாதுகாப்பை வலியுறுத்தி 101 யோகாசனங்கள்; மாணவி அசத்தல்
சுகாதார பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் பள்ளி மாணவி 101 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், மைக்ரோ பாயின்ட் கம்ப்யூட்டர் சென்டர் சார்பில் சுற்றுப்புற சுகாதார பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த நிகழ்ச்சிக்கு தமாகா மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார்.
கம்ப்யூட்டர் சென்டர் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
எடுஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளி மாணவியான 10 வயது ரவீனா, சப்தா வஜ்ராசனம், பரசரிதா பட்டையாசனம், வட்டாசனம், யோகமுத்ரா, பத்மா விபரீதகாரணி உள்ளிட்ட 101 ஆசனங்களை செய்து, சுற்றுப்புற சுகாதாரத்தை பேண வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா மாணவி ரவீனாவை பாராட்டி பரிசு வழங்கினார். இதில், சாய் தேவ் தொண்டு நிறுவன நிறுவனர் சைலஜா கணேசன், ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், மாணவியின் தந்தை ஆர்.விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.