சாலையோர கடைக்காரர்களுக்கு இலவச குடை
கோவில்பட்டி லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி சார்பில் சாலயோர வியாபாரிகளுக்கு இலவச குடைகள் வழங்கப்பட்டன. செருப்பு தைய்க்கும் தொழிலாளி, கரும்பு ஜூஸ் கடைக்காரர், எலுமிச்சை வியாபாரி உள்பட 5 பேருக்கு இந்த குடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் பட்டைய தலைவர் முருகேசன். தலைவர் முருகேஷ், செயலாளர் கண்ணன். பொருளாளர் பாலமுருகன், கிளப் அட்மின் ஜி.எம்.துரைப்பாண்டியன், ஜெயபால், பாலசுந்தர் மற்றும் கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர் .