ஜே.காம் சார்பில் 4 மாவட்ட தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பு கூட்டம்
ஜே.சி.ஐ,அமைப்பின் ஒரு அங்கமாக விளங்கும் ஜே.காம். திருநெல்வேலி டேபிள் சார்பில் 4 மாவட்ட ஜே.காம்., தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலியில் நடந்த இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, கோவில்பட்டி, ராஜபாளையம், தென்காசி ஜே.காம்.உறுப்பினராக உள்ள தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
ஜே.காம். சேர்மன்கள் சகாய விவேக் (திருநெல்வேலி) உதயலட்சுமி(கோவில்பட்டி) லோகநாதன்(தென்காசி) லாவண்யா( ராஜபாளையம்) ஆகியோர் பேசினார்கள். பயிற்சியாளர் அருண்குமார் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் பல்வேறு தொழில் முனைவோர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு தொழில் இணைப்பு பற்றி பேசினார்கள். அவர்களுக்கு தேவைப்படுவோர் வர்த்தக வாய்ப்பு கொடுத்து ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக்கொண்டனர்.
திருநெல்வேலி ஜே.காம் டேபிள் துணை சேர்மன் பகவதி, நெல்லை எல்.இ.டி. மாரியப்பன்,ஜெய்சன், ,முத்துமாரி,மனோஜ் குமார், கோவில்பட்டி ஜே.காம் டேபிள் சார்பில் கண்ணப்பன், செல்வலட்சுமி, பிரவின், ஹேமா, ஸ்டீபன் நரேஷ், சார்லஸ், தினேஷ்பாபு, கதிர், தென்காசி ஜே.காம் டேபிள் சார்பில் கிறிஸ்டோபர், அந்தோணி ராஜேந்திரபிரபு, ராஜபாளையம் டேபிள் சார்பில் ஹரிசிங் ஜெயம் ராஜா, மகா விக்னேஷ் உள்ளிட்டோர் தங்கள் தொழிலை விளக்கி பேசினார்கள்.
முடிவில் திருநெல்வேலி ஜே.காம்.செயலாளர் கிளிண்டன் நன்றி கூறினார்.