6-வது ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கபட்டது, இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான தொண்டர்கள் ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் […]







