குடும்ப அட்டைதாரர்களிடம், வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பெற உத்தரவு
வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் குறித்து அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் “தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பவர்கள் குறித்த விவரங்களை கேட்டு பெற வேண்டும். சுமார் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. எனவே அவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பூஜ்ஜியம் இருப்பு கணக்கு தொடங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மண்டல பதிவாளர்களுக்கு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.