திருப்பூர், நல்லூர் தேவாலயம் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் மது போதையில் இருந்தார். இடுப்பில் ரூ.1½ லட்சம் வைத்து இருந்தார். அத்தனையும் 500 ரூபாய் நோட்டுகள். அந்த பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்றும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணம் என்றும் அவர் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை […]
சென்னை ராயபுரத்தில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனையை கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் வடசென்னை தொகுதி பொறுப்பாளருமான டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர்.,ஜ ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது,; மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வேட்பு மனு தாக்கல் செய்யும் நடைமுறையை திமுக அரசும், […]
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை […]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் வக்கீல் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் […]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி , இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திறந்த வேனில் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்தார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணா சிலை அருகில், க.பரமத்தி கடைவீதி ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,கை சின்னத்திற்கு வாக்கு அளிக்கப் பிரச்சாரம் செய்தார். […]
தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்-ஸ்டாலின் இரங்கல்
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடைபெற இருக்கும் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு பதிலாக திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.. கூடுதலாக தொகுதி ஒதுக்கப்படாததால் கணேசமூர்த்தி மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி கடந்த 24-ந் தேதி அன்று அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது, […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஜான் பாண்டியன் களத்தில் இருக்கிறார். தனிச்சின்னத்தில் போட்டியிடுவேன் என்று அறிவித்து இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி , டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் சின்னத்தை ஒதுக்கவில்லை. இந்நிலையில், தென்காசி தொகுதியில் […]
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 25ந்தேதி நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டனமத்திய சென்னை தொகுதியில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 9 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்தி.மு.க. வேட்பாளர் […]
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் சொத்து விவரங்களை தெரிவித்து உள்ளார். தனக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்து இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம், இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அந்த நகைகளின் மதிப்பு ரூ,.55 லட்சத்து 37 ஆயிரத்து 555 ஆகும்.
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது, அசையும் சொத்து ரூ.36 லட்சம், அசையா சொத்து ரூ.1.12 கோடி இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலை மனைவி அகிலா பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.53 லட்சம் அசையா சொத்தும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது,
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







