கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம்; தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
திருப்பூர், நல்லூர் தேவாலயம் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் மது போதையில் இருந்தார். இடுப்பில் ரூ.1½ லட்சம் வைத்து இருந்தார். அத்தனையும் 500 ரூபாய் நோட்டுகள்.
அந்த பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்றும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணம் என்றும் அவர் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி உதவி ஆணையாளர் தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்தில் சேர்த்தனர்.
மேலும் மதுபோதையில் இருந்த பெண்ணை காப்பகத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.