• April 27, 2024

தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி

 தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி

 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஜான் பாண்டியன் களத்தில் இருக்கிறார்.

தனிச்சின்னத்தில் போட்டியிடுவேன் என்று அறிவித்து இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி , டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். 

ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் சின்னத்தை ஒதுக்கவில்லை.

இந்நிலையில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *