• November 16, 2026

Month: October 2026

செய்திகள்

இசையமைப்பாளர் தேவா உடல்,அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம்

தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வர், இசையமைப்பாளர் தேவா. சென்னை தியாகராயநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த தேவா, சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.  இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மோசமடைய, அவர் உடனடியாக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.அவருக்கு வயது 75.  தேவா உயிரிழந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்களி […]

செய்திகள்

மழை நீர் தேங்கியது : மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம், கிளாம் பாக்கத்துக்கு

ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக  மறைமலைநகரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  மறைமலை நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 382 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து மறைமலை நகருக்கு வரும் பயணியரை ஏற்றிச் செல்ல தனியாக 45 இலவச மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில், கனமழையால் மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையங்களில் வெள்ளநீர் தேங்கியதால் பேருந்து […]

செய்திகள்

பழனி மலைக்கோவிலில் விஜயதசமி அன்று காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி, வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான  விஜயதசமியன்று 20-ந்தேதி கோதைமங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் மலைக்கோவிலில் நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடக்கிறது.தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் சன்னதி திருக்காப்பிடப்பட்டு, பராசக்தி வேல் புறப்பாடாகி பெரியநாயகி அம்மன் கோவிலை சென்றடையும். அங்கு வள்ளி, தெய்வானை […]

தூத்துக்குடி

நகைக்கடை மேலாளரிடம் ரூ.10.50 கோடி தங்க கட்டிகள் மோசடி : 2 பேருக்கு வலைவீச்சு

தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் நகைக்கடை மேலாளர் சிவபிரகாஷ் (வயது 23). இவர் கடந்த ஆகஸ்ட் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில், மேலூர் பகுதியைச் சேர்ந்த தனவாடே சச்சின் (42) என்பவரிடம்  10.50 கோடி மதிப்பிலான 7,944.680 கிராம் தங்கக் கட்டிகளை சுத்திகரித்து 24 காரட் தங்கமாக மாற்றுவதற்காக கொடுத்தார். ஆனால், வாங்கிய தங்கக் கட்டிகளைத் திருப்பி தராமல் பெங்களூருவைச் சேர்ந்த பிரசாத் சவானிடம் ரூ.9 கோடிக்கு  தனவாடே சச்சின் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் அந்த […]

கோவில்பட்டி

அகில இந்திய ஆக்கி: வெண்கல பதக்கம் வென்ற கோவில்பட்டி பள்ளி வீரர்களுக்கு வரவேற்பு 

கோவில்பட்டியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று ராகுல் பாண்டியன் தலைமையிலான கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி அணி தேசிய போட்டிக்கு தகுதி பெற்றது. இதை தொடர்ந்து அரியானாவில் ஒரு வாரம் நடைபெற்ற அகில இந்திய CBSE பள்ளிகளுக்கு இடையிலான தேசிய ஆக்கி போட்டியில் முதல் முறையாக பங்கேற்றனர்.  போட்டியில் சிறப்பாக ஆடி மூன்றாவது இடம் பிடித்தனர். இதனால் அவர்களுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இதற்காக பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.  பின்னர் அரியானாவில் இருந்து பரிசு கோப்பையுடன் […]

செய்திகள்

வங்கி மேலாளரை காரில் கடத்தி ரூ. 7 லட்சம் பறிப்பு : 2

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, பாலையம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 42), ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.  சம்பவத்தன்று குற்றாலத்திற்கு அருவியில் குளிப்பதற்காக வந்த பொன்னுச்சாமி,  தனது செல்போனில் ஒரு செயலி  மூலம் ஒருவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி மிலிட்டரி கேண்டீன் பகுதிக்கு வருமாறு அந்த நபர் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பொன்னுச்சாமியை, காரில் வந்த மர்ம நபர்  வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளார். தென்காசி சாலையில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சட்ட விதிமுறைகளை மீறி நடந்த `எக்ஸ்போ ‘ நிறுத்தம்

தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் (உரிமம் வழங்குதல்) சட்டம் 1965ன் படி, கட்டிட உரிமம் எந்த உபயோகத்திற்காக வழங்கப்பட்டதோ அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், திருமண மண்டபங்களில் எக்ஸ்போ என்ற பெயரில் நடத்தப்படும் வணிக கண்காட்சிகளை உரிய அனுமதியின்றி நடத்தக் கூடாது.  திருமண மண்டபங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற  தீர்ப்புகள் தெளிவாக இருந்த போதும், கோவில்பட்டியில் எட்டயபுரம் காலையில் உள்ள சத்தியபாமா திருமண மண்டபத்தில் இன்று காலை தனியார் […]

செய்திகள்

கூட்டுறவு அங்காடிகள் மூலம் சன்னரக அரிசி ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனியார் அரிசி ஆலைகள் மற்றும் பிற ஆதாரங்களின் வாயிலாக அரிசியை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் […]

செய்திகள்

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடக்கிறது

தமிழ் திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளரும், பாடகருமானவர் தேனிசை தென்றல் தேவா. இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். 76   76 வயதான தேவாவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள […]

சினிமா

கலாநிதி மாறன் மகள் காவ்யாவை மணக்கிறார் அனிருத் 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத்துக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக இவர்கள் இருவரது திருமணம் குறித்த கிசுகிசுக்கள் வலம் வந்த நிலையில், தற்போது திருமண நாள் திருமணம் நடக்கும் இடம் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. அனிருத் – காவ்யா மாறன் திருமணம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முதலில் […]