• November 16, 2026

Month: October 2026

தூத்துக்குடி

புதிய ஊடக ஆணையம் அமைக்க வேண்டும் ; தூத்துக்குடி ஆட்சியரிடம் பத்திரிகையாளர்கள் மனு

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் தலைவரும், அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டிஎஸ்ஆர் சுபாஷ் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் பத்திரிகையாளர்களின் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனிடம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் தலைமையில் மனு வழங்கப்பட்டது. தேசியக்குழு உறுப்பினர் சங்கர், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சண்முக ஆனந்த், நிர்வாகிகள் இம்மானுவேல் குணசிங், […]

கோவில்பட்டி

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப சாவு 

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் மணிகண்டன் (வயது 11).  அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மணிகண்டன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக, வீட்டின் முன் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த எர்த் பைப்பை மணிகண்டன் தொட்டார். அதில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்து மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனை […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 77 கோடி மதிப்பில் கடல்சார் காற்றாலை திட்டம்: டெண்டர் வெளியீடு 

  இந்திய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கடந்த ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி, நாட்டின் மொத்த காற்றாலை திறனான 57,443 மெகாவாட்டில், 10,734 மெகாவாட்டிற்கும் அதிகமான திறனைக் கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் திகழ்கிறது. தற்போது இத்துறையைக் கடலுக்குக் கொண்டு செல்லும் வகையில், தூத்துக்குடி உள் துறைமுகத்தின் தெற்கு அலைதடுப்புச் சுவரிலிருந்து சுமார் 1,650 மீட்டர் தொலைவில் 6.25 மெகாவாட் திறன் கொண்ட  காற்றாலை நிறுவப்படவுள்ளது. ரூ.77 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளியை […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் :  510 மனுக்கள் குவிந்தன

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர பல்வேறு […]

செய்திகள்

3விஞ்ஞானிகளுக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான நோபல் பரிசை அறிவிக்கும் நிகழ்வு இன்று தொடங்கியுள்ளது. 50 உறுப்பினர்களை கொண்ட நோபல் அமைப்பானது, பரிசுக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அறிவிக்கும். வாழ்க்கை அறிவியல் அல்லது மருத்துவ துறையில் அரும்பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.இதன்படி, முதலில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது., சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா மையத்தில் நோபல் பரிசுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கார்ல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி. ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று கோவில்பட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான அன்னதான நிகழ்ச்சி புதுக்கிராமம் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்றதுநிகழ்ச்சிக்கு இல்லத்துப் பிள்ளைமார் சமூக சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் பழனி மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார் இல்லத்து பிள்ளைமார் சமூக சங்க துணைத் தலைவர் வெங்கடேசன். துணைச் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சவுமியா அன்புமணியுடன் உப்பு உற்பத்தியாளர்கள் சந்திப்பு; கப்பல் கட்டும் தளத்தை மாற்று

தூத்துக்குடி உப்பளம் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இக்கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், தென் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டுச் சென்னை திரும்புவதற்காகப் பாமக சட்டமன்றக் குழுத் […]

செய்திகள்

இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), பி.சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயகுமார் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். எனவே 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே திருச்சி கிழக்கு. […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் கருத்தரங்கம்; ஆட்சியர் விஷு மகாஜன், நாளை

கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் கருத்தரங்கம்  நாளை   அக்டோபர் 6 ந் தேதி  நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. “உள்ளூரில் தயாரிப்போம்… உலகிற்கு ஏற்றுமதி செய்வோம்!” என்ற கோஷத்துடன் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றி அலசி ஆராயப்படுகிறது.  கருத்தரங்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் விஷு மகாஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். நேஷனல் என்ஜினியரிங் […]

கோவில்பட்டி

இந்திய கலாச்சார நட்புறவு கழக மாவட்ட குழு கூட்டம்; கோவில்பட்டியில் நடந்தது

இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில துணைத் தலைவர் அபிராமி முருகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ராமலட்சுமி முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் முருகசரஸ்வதி வரவேற்று பேசினார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாநிலச் செயலாளர் க. தமிழரசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு *இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கையை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிப்பது. *2026 நவம்பர் 3வது […]