கோவில்பட்டி புதுக்கிராமத்தில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
Oplus_16908288
கோவில்பட்டி. ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று கோவில்பட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான அன்னதான நிகழ்ச்சி புதுக்கிராமம் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு இல்லத்துப் பிள்ளைமார் சமூக சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் பழனி மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார் இல்லத்து பிள்ளைமார் சமூக சங்க துணைத் தலைவர் வெங்கடேசன். துணைச் செயலாளர் சங்கரநாராயணன். ஆர்மி சந்திரசேகர். ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பொங்கல் பிரசாதத்தை மண்டல துணை வட்டாட்சியர் பாலு வழங்கினார். அன்னதான நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோவில்பட்டி வட்டாட்சியர் அறிவழகன் என்ற சிவராஜ் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஜெயராஜ் ஸ்டோர் உரிமையாளர் ராஜா என்ற விஜி., விக்னேஸ்வரி எண்டர்பிரைசஸ் அசோக். கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன். இல்லத்துப் பிள்ளைமார் சமூக சங்க செயலாளர் முருகேசன்.
ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன். தலைவர் ஜெயக்கொடி பொருளாளர் கார்த்திகேயன். செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன். சண்முகசுந்தரம். தங்கராஜ். பாலமுருகன். பாண்டியன். பெரியசாமி. சண்முகவேல். நாகஜோதி மேலாளர் பாலமுருகன். கொல்லம் சேகர். தனபால். பசுமை இயக்கம் செந்தில்.உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக உலக மக்கள் நலன் வேண்டி சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சிக்கான ராஜா என்ற விஜி பழனி மாரியப்பன் தினேஷ் பாலாஜி உள்ளிட்டோர் செய்திருந்தனர். ,முடிவில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கச் செயலாளர் தினேஷ் பாலாஜி நன்றி கூறினார்.







