சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் வன்னி அரசு இந்தநிலையில் விழுப்புரத்தில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டவுடன், அன்றே சட்டப்பேரவையில் இதுகுறித்து விரிவாக்கம் செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே […]
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ”சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடந்த […]
சென்னை தியாகராயநகரில் செயல்படும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுதருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில், சமரசம் மையங்கள் அக்டோபர் 1 ம் தேதி முதல் டிசம்பர் 31 ந் தேதி வரை செயல்படுகின்றன. இந்த மையங்களில் குடும்ப பிரச்சனை வழக்கு, வாகன விபத்து இழப்பீடு, குடும்ப வன்முறை, காசோலை மோசடி, வர்த்தக பிரச்சனை, வங்கி கடன், பாகப்பிரிவினை வழக்கு மற்றும் இதர உரிமையியல் வழக்குகள், வாடகை தகராறு, நில ஆர்ஜிதம், தொழிலாளர் வழக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் சூர்யா திருமண மண்டபம் மற்றும் வாடகை வீடுகள் உள்ளன. இந்த கட்டிடத்தின் உரிமையாளரான ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் விஜயமுத்துப்பாண்டியன் மறைவுக்குப் பின், அவரது மனைவி சிவகாமி இத் திருமண மண்டபம் மற்றும் வாடகை வீடுகளைப் பராமரித்து வருகிறார். நேற்று மாலையில் திருமண மண்டபத்திற்கான வாடகைத் தொகை ரூ.3,40,000-ஐ ஒருவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட சிவகாமி, அத்தொகையை தனது வீட்டில் உள்ள அலமாரியில் பூட்டி வைத்துள்ளார். பின்னர், வீட்டின் சாவியை யாருக்கும் […]
யூடியூப் மூலம் பணக்காரரான லாரி டிரைவர்; “இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான டிரக்” உருவாக்கினார்
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் என்ற ஊரைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. டிரைவரான இவர், தனது நீண்ட தூரப் பயணங்களின் போது நெடுஞ்சாலை ஓரங்களில் அவரே சிக்கன், மட்டன் மற்றும் மீன் போன்ற உணவுகளைச் சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அவரது மகன் சாகரின் உதவியுடன் ‘ஆர் ராஜேஷ் விலாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலில் வீடியோவாகப் பதிவிடத் தொடங்கினார். அவரது சேனல், கிட்டத்தட்ட 3 மில்லியன் சந்தாதாரர்களையும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றது. தனது […]
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி ‘வி த லீடர்ஸ்’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். முதலில் இயக்கமாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். இதற்கிடையில், ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு. நாகராஜனை நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். […]
கோவில்பட்டியில் விஸ்வகர்ம மகாஜன சங்கம், விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம், விஸ்வகர்ம நகை தொழிலாளர்கள் சங்கம், விஸ்வகர்ம ஜெயந்தி நல அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய விஸ்வப்பிரம்ம ஜெயந்தி, ஆராதனை விழாவை நடத்தின. விஸ்வகர்ம மகாஜன சங்கத் தலைவர் பால முருகேசன், விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்க தலைவர் கணேசன், விஸ்வகர்ம ஜெயந்தி நல அமைப்பு தலைவர் முத்துவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் மகாஜன சங்கத் தலைவர்கள் ராஜமாணிக்கம், பால்ச்சாமி,கைத்தறி மற்றும் துளிநூல் துறை ஓய்வு பெற்ற […]
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுச் செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் ஜாமின் கோரி 2-வது முறையாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் வசந்த் பல் மருத்துவமனை சார்பில் கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளியில் பல் பாதுகாப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார், கரிதா பப்ளிக் பள்ளி தாளாளர் காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல் பாதுகாப்பு மருத்துவ முகாமை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் முத்து செல்வம் தொடக்கி வைத்தார். பல் மருத்துவர் சுதாகர் […]







