இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இஸ்ரோ சார்பில் சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்ததை பாரதப் பிரதமரால் தேசிய விண்வெளி தினம் அறிவிக்கப்பட்டது, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை இறக்கிய முதல் நாடாகவும்,நிலவில் மென்மையாக தரையிறக்கியதில் 4வது நாடாகவும்,இந்தியா சாதனை படைத்துள்ளது.விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயரிடப்பட்டுள்ளது. கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,தூத்துக்குடி அஸ்ட்ரோ […]
தூத்துக்குடியில் நகைக்கடை நடத்தி வரும் சச்சின் (வயது 42) , உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் பணத்தை கடத்தி செல்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. வருமான வரித்துறை துணை இயக்குநர் ஜெகீஷ் அளித்த தகவலின் பேரில், எலெக்ட்ரானிக் சிட்டி மண்டல துணை போலீஸ் கமிஷனர் நாராயண் வழிகாட்டலில், எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஓசூர் மெயின் ரோடு, வீரசந்திரா சிக்னல் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் குறிப்பிட்ட காரை காவல்துறையினர் […]
திமுகவில் மாவட்டக் கழகங்கள் 110-ஆக அதிகரிப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளராக ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், திமுகவின் 16-வது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைக்கும் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு :- கிளைக் கழகச் செயலாளர்: வயது வரம்பு அதிகபட்சமாக 45 […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வந்து பங்கேற்ற விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசுகையில் கூறியதாவது:- “விவசாயிகளின் நிலங்களிலேயே கூண்டுகள் வைத்து காட்டு பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிடிபடும் பன்றிகளை வனத்துறை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 45 நாட்களுக்குள் கூண்டுகள் தயார் செய்யப்பட்டு, மாவட்டத்தின் 10 வட்டாரங்களுக்கும் […]
1942 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி, ஆங்கிலேய அரசை அடிபணிய வைக்க செய் அல்லது செத்து மடி எனும் முழக்கமிட்டு வெள்ளையனே வெளியேறு என்ற ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கி வைத்தார் அன்று முதல் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது போராட்டத்தின் விளைவாக கோவில்பட்டி அருகே கடலையூரில் ஆகஸ்ட் 22ம் தேதி வெயிலுகந்த முதலியார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசால் துப்பாக்கி சூடு […]
கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரி கணினி அறிவியல் துறையின் சார்பில் “மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி – (இந்நோவெக்சா 2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி. கல்லூரியின் செயலர் பா மகேந்திரன் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது கல்லூரி முதல்வர் அ. பாண்டியராணி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா மகேஷ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் புதுமை, தொழில்நுட்பத் திறமை மற்றும் படைப்பாற்றலை மாணவர்கள் அறிந்து கொண்டனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 180 க்கும் […]
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத திருவிழா காலக் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தென்னக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெyuk (06115 / 06116) அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையம் வழியாக செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு, முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி – ஆந்திரா இடையே சிறப்பு ரெயில்கள்: கோவில்பட்டி பகுதி பயணிகள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி – ஆந்திராவின் நரசாபூர் இடையே செப்டம்பர் 7 முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்துக்கு உப்பள நிலங்களை கையகப்படுத்த கூடாது ; அமைச்சரிடம்
தூத்துக்குடி கடற்கரையை ஒட்டியுள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்திருக்கும் கோவளம், பசுவந்தனை, தன்பாடு ஆகிய சிறிய அளவு உப்பள நிலங்களை, புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நில கையகப்படுத்தல் செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராகவும், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் இணைந்து பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு சென்று, […]
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார். அவருக்கு வயது 94. வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் அளவில் அவரது உயிர் பிரிந்தது. சவுகார் ஜானகியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931-ல் பிறந்தவர் செளகார் ஜானகி . தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க […]
தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோர் கட்டிட வேலை தொடங்கும் முன்பே வரைபட அனுமதி பெறவேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது :- புதிய கட்டிடங்கள் கட்டுபவர்கள் இனிமேல் கட்டிட வேலை தொடங்குவதற்கு முன்பேகட்டிட வரைபட அனுமதி பெற வேண்டும்.கட்டிட வரைபட அனுமதி பெற்ற பிறகுகட்டுமான வேலையைதொடங்க வேண்டும். கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டுவது தெரிய வந்தால் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பாதுகாப்பான […]







